AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Suriya47: அன்பான ஃபேன்ஸ் ரெடியா-ஆ? சூர்யா47 படம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்!

Suriya47 Update: தென்னிந்திய மொழிகளில் அதிரடி நாயகனாக நடித்து ஹிட் கொடுத்துவருபவர் சூர்யா. மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில், சூர்யா தனது 47வது படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இது குறித்து தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Suriya47: அன்பான ஃபேன்ஸ் ரெடியா-ஆ? சூர்யா47 படம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்!
சூர்யா 47 திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 08 Sep 2026 18:17 PM IST

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் நடிகராக இருப்பவர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் தமிழில் இதுவரை மொத்தம் 46 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath And Sons). இதை இயக்குநர் வெங்கி அட்லூரி (venky Atluri) இயக்க, சித்தாரா எண்டெர்டைமெண்ட்ஸ் நிறுவனமானது தயாரித்திருந்தது. இந்த படமானது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகியிருந்த நிலையில், சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது. இதில் சூர்யா மற்றும் மமிதா பைஜூ (Mamitha Baiju) இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்திற்கு பின் மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் (Jithu Madhavan) இயக்கத்தில், இவர் நடித்துவரும் 47வது திரைப்படம்தான் சூர்யா47 (Suriya47). இந்த படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் காமெடி கதைக்களத்தில் உருவாகிவருவதாக கூறப்படுகிறது.

இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை நஸ்ரியா நஸீம் (Nazriya Nazim) நடித்துள்ளார். மேலும் நஸ்லென் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். அந்த விதத்தில் இன்று (08/09/2026) இப்படத்திலிருந்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: மொதராத்திரி படத்தை பாராட்டி பேசிய இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி – வைரலாகும் பதிவு

சூர்யாவின் 47வது திரைப்படத்திலிருந்து வெளியான முக்கிய அப்டேட்:

நடிகர் சூர்யா மற்றும் நஸ்ரியா ஜோடி முதல் முறையாக சூர்யா47 படத்தில் இணைத்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சுஷீன் ஷ்யாம் இசையமைத்துவரும் நிலையில், சூர்யாவின் ழகரம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. இதில் சூர்யா போலீஸ் அதிகாரியாகவும், நகைச்சுவை வேடத்திலும் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: சர்தார் 2 படத்தில் அப்படிப்பட்ட காட்சி ஒன்று இருக்கு – மாளவிகா மோகனன் சொன்ன சீக்ரட்!

தற்போது இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ, நாளை (09/09/2026) மாலை 6 மணியளவில் வெளியாகிறதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அதிகாரப்பூர்வ வெளியாகியுள்ளது. இது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

சூர்யா47 படத்தின் கிளிம்ப்ஸ் குறித்த எக்ஸ் பதிவு:

சூர்யாவின் 47வது திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும்:

சூர்யாவின் இந்த படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ளதாம். இந்த படமானது இவருக்கு மாபெரும் ஹிட்டை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவின் நடிப்பில் 2026ம் ஆண்டில் சூர்யாவின் நடிப்பில் கருப்பு மற்றும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என இரு படங்களும் வெளியாகியுள்ளது. மேலும் 2026ம் ஆண்டில் 3வது படமாக வெளியாக காத்திருப்பதுதான் சூர்யா47. இந்த படமானது 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us