AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தவெக வேட்பாளர்கள்… இந்த இருவருக்கு தான் மீண்டும் வாய்ப்பு.. நாளை பட்டியல் வெளியீடு?

TVK Candidate : தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான அறிவிப்பு நாளை வெளியாவதாக கூறப்படுகிறது.

தவெக வேட்பாளர்கள்… இந்த இருவருக்கு தான் மீண்டும் வாய்ப்பு.. நாளை பட்டியல் வெளியீடு?
மதுராந்தகம்- தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 09 Sep 2026 16:16 PM IST

சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் ஆதரவு கட்சிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு யாரை வேட்பாளராக அறிவிக்கலாம் என்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இதில், இரு தொகுதிகளில் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, நாளை முதல்வர் விஜய் வெளிநாடு செல்ல உள்ள நிலையில், அதற்கு முன்னதாக தவெக வேட்பாளராக மதுராந்தகம் தொகுதிக்கு மரகதம் குமரவேல் தாராபுரம் தொகுதிக்கு சத்தியபாமா ஆகியோர்களை வேட்பாளர்களாக அறிவிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

3 முக்கிய காரணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை

பனையூர் தவெக அலுவலகத்தில் ஆதரவு கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். இதில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு யாரை வேட்பாளராக நிறுத்தலாம். தவெக அரசின் 4 மாத ஆட்சி எப்படி இருந்தது. ஆதரவு கட்சிகளின் கூட்டணிக்கு எந்த பெயரை தேர்வு செய்து அறிவிக்கலாம் என்பது தொடர்பாக முதல்வர் விஜய் ஆலோசனை மேற்கொண்டிருந்தார்.

மேலும் படிக்க: 103878.

தவெக எம்எல்ஏ-க்கள் பலத்தை அதிகரிப்பதற்காக . . .

இதில், முதல் கட்டமாக இரு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி உள்ள நிலையில், இரு தொகுதிகளுக்கு வேட்பாளரை முதலில் தேர்வு செய்வது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனையில், மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோரை மீண்டும் களம் இறக்கலாம் என்று முதல்வர் விஜய் தெரிவித்ததாக தெரிகிறது. அத்துடன், தமிழக வெற்றி கழகத்திற்கு பெரும்பான்மை எம்எல்ஏக்கள் பலம் இல்லாத காரணத்தால் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் தவெக வேட்பாளர்களை களம் இறங்கியதாகவும் கூறப்படுகிறது.

முதல்வர் விஜய் போட்ட மாஸ் பிளான்

ஏற்கனவே, இந்த இரு தொகுதிகளில் அதிமுக சார்பில் இருவரும் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், அவர்களுக்கான ஆதரவு அந்த தொகுதியில் இருக்கும் எனவும், அதனை தவெக முழுமையாக அறுவடை செய்ய வேண்டும் என்பதன் அடிப்படையிலும், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோருக்கு மீண்டும் போட்டியிட முதல்வர் விஜய் வாய்ப்பு வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: இடைத்தேர்தல் களம்: அதிமுகவில் போட்டியிடப் போவது யார்?.. உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Follow Us