AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நாளை அறிமுகமாகும் ஆப்பிள் 18 ப்ரோ, ப்ரோ மேக்ஸ்.. முக்கிய அம்சமாக களமிறங்கு ஆப்பிள் ஃபோல்டு!

Apple's First Foldable Smartphone To Launch Tomorrow | ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், நாளை (செப்டம்பர் 09, 2026) இதுவரை இல்லாத வகையில் தனது ஃபோல்டு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.

நாளை அறிமுகமாகும் ஆப்பிள் 18 ப்ரோ, ப்ரோ மேக்ஸ்.. முக்கிய அம்சமாக களமிறங்கு ஆப்பிள் ஃபோல்டு!
ஆப்பிள் ஃபோல்டு ஸ்மார்ட்போன்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 08 Sep 2026 13:03 PM IST

ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது அடுத்த படைப்பான ஆப்பிள் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை (Apple 18 Series Smartphones) அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனம் இதுவரை செய்யாமல் இருந்த முக்கியமான விஷயம் ஒன்றை செய்ய உள்ளது. அதாவது, ஆப்பிள் தனது முதல் மடிக்கக்கூடிய, அதாவது ஃபோல்டு ஸ்மார்ட்போனை (Fold Smartphone) அறிமுகம் செய்ய உள்ளது. ஆப்பிள் நிறுவனம், ஐபோன் 18 ப்ரோ (iPhone 18 Pro) மற்றும் 18 ப்ரோ மேக்ஸ் (iPhone 18 Pro Max) ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ள நிலையில், இந்த முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்ய உள்ளது.

ஆப்பிள் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் நாளை அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம் நாளை (செப்டம்பர் 09, 2026) தனது Surprise and Shine நிகழ்ச்சியை நடத்த உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தான் இந்த ஆப்பிள் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. இதில் தான் ஆப்பிளின் புதிய அத்யாயமான ஆப்பிள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆப்பிள் 18 ப்ரோ மேக்ஸுக்கு மேலாக அறிமுகம் செய்யப்படும். அதாவது, இது முற்றிலும் ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போனாக இருக்கும்.

இதையும் படிங்க : ஜிமெயில், டாக்ஸில் வரும் ஏஐ.. இனி குரல் மூலமே பல வேலைகளை செய்யலாம்.. முழு விவரம்!

ஐபோன் ஃபோல்டு – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

இந்த புதிய ஆப்பிள் ஃபோல்டு ஸ்மார்ட்போன் புத்தக வடிவிலான தோற்றத்தை கொண்டு இருக்கும் என கூறப்படுகிறது. மொபைல் போன் அளவில் இருந்து பெரிய அளவிற்கு அது மாற்றமடையும். இந்த ஸ்மார்ட்போனின் உட்பக்க ஸ்கிரீன் 5.5 இன்ச்கள் மற்றும் வெளிப்பக்க ஸ்கிரீன் 7.8 இன்ச்களை கொண்டு இருக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க : பழைய லேப்டாப் போதும்! 16GB RAM, 1TB சேமிப்பு வழங்கும் ஜியோபிசி

இதுவரை அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன்களிலேயே இந்த ஃபோல்டு ஐபோன் தான் அதிக விலை கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. அது அப்பிள் ப்ரோ மேக்ஸையும் தாண்டி அல்ட்ரா ப்ரீமியம் ரகத்தில் சேரும் என கூறப்படுகிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்படும் ஆப்பிள் ஐபோன்களில் ஃபேஸ் ஐடி கொடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆப்பிள் ஐபோன் ஃபோல்டு ஸ்மார்ட்போனில் விரல் ரேகை பதிவு வழங்கப்படும் என கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Follow Us