Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

எனது மகளும் மாப்பிள்ளையும் இணைந்து வாழவேண்டும்… ஆர்த்தி ரவியின் அம்மா வேண்டுகோள்!

Producer Sujatha Vijayakumar : தமிழ் சினிமாவில் முன்னை நடிகர்களில் ஒருவராக வலம்வருபவர் ரவி மோகன். சமீபகாலமாக இவருக்கு இவரின் மனைவி ஆர்த்தி ரவிக்கும் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. இது தொடர்பான விமர்சனங்களும் எழுந்து வருகிறது. அந்த விதத்தில் நடிகர் ரவி மோகன், மற்றும் ஆர்த்தி ரவியைத் தொடர்ந்து, தயாரிப்பாளரும் ரவி மோகனின் மாமியாருமான சுஜாதா விஜயகுமார் தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

எனது மகளும் மாப்பிள்ளையும் இணைந்து வாழவேண்டும்… ஆர்த்தி ரவியின் அம்மா வேண்டுகோள்!
ரவி மோகன், ஆர்த்தி ரவி மற்றும் சுஜாதா விஜயகுமார் Image Source: Instagram
barath-murugan
Barath Murugan | Updated On: 17 May 2025 17:53 PM

நடிகர் ரவி மோகன்  (Ravi Mohan) தமிழ் சினிமாவில் முன்னணி பிரபலங்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் மிகவும் பிரமாண்டமாகத் தயாராகி வருகிறது. மேலும் சமீபத்தில் நடிகர் ரவி மோகன், தனது தோழியான கெனிஷா பிரான்சிஸ் (Kenisha Francis)  என்பவருடன், தயாரிப்பாளர் ஐசரி கணேசனின் (Isari K Ganesan) மகள் திருமணத்தில் கலந்துகொண்டிருந்தனர். இந்த திருமணத்தில் கலந்துகொண்ட ரவிமோகனும், அவரது தோழி கெனிஷாவும் ஒரே நிற ஆடை அணிந்து திருமண விழாவில் கலந்துகொண்டார். இதை தொடர்ந்து இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும், திருமணம் செய்யவுள்ளதாகவும் இணையத்தில் தகவல் பரவி வந்தது. ஆனால் இது குறித்து முன்னதாகவே இவர்கள் இருவரும் நாங்கள் நண்பர்கள் என்று விளக்கம் கொடுத்திருந்தனர்.

ஆனால் அதை தொடர்ந்தும் இவர்கள் இருவரும் ஒரே நிற ஆடையில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிலையில் மீண்டும் வதந்திகள் பரவ தொடங்கியது. இந்நிலையில் இதைத் தொடர்ந்து நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவி  (Aartih Ravi) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இவ்வாறு ஒரே நிற ஆடையில் பொது இடங்களில் கலந்துகொண்டு, எனது குழந்தைகளின் மனதை நோகடிக்கவேண்டாம் என்று கூறியிருந்தார்.

இதை தொடர்ந்து நடிகர் ரவியும் விளக்கமாக சுமார் 5 பக்கத்திற்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கையில் இந்த தகவல்கள் பற்றி விளக்கமாகப் பேசியிருந்தார். இதில் அவர் மீது பணிச்சுமையை வைத்தாகவும் குற்றம் சட்டிருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக ஆர்த்தி ரவியின் தாய் , தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரும் ரவி மோகனுக்கு எதிரான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் வெளியிட அறிவிப்பு :

இந்த அறிவிப்பில் தயாரிப்பாளரும், ரவி மோகனின் மாமியாருமான சுஜாதா விஜயகுமார், தான் சுமார் 245 வருடங்களுக்கும் மேலாக சினிமாதுறையில் இருந்துவருவதாகவும், இந்த துறையில் இவ்வளவு காலம் நீடித்தது இருப்பது கடினமான விஷயம்தான். மேலும் நான் படங்கள் சம்பந்தத்தைத் தவிர வேறு எதற்காகவும் மீடியா முன் வந்ததில்லை, ஆனால் தற்போதுள்ள சந்தர்ப்பம் என்னை இந்த கேள்விக்குப் பதிலளிக்க வேண்டிய நிர்பந்தத்தில் நிறுத்தியுள்ளதாகக் கூறியிருக்கிறார். மேலும் அவர் கடந்த சில காலங்களாக நான் கொடுமைக்காரி, குடும்பத்தைப் பிரித்தவள், சொத்தை அபகரித்தவள் மற்றும் பணப்பேய் என என்னைப் பற்றிப் பல விஷயங்கள் உலாவி வருகிறது. எனக்குப் படங்களில் பல தோல்விகள் வந்தபோதிலும் படங்களைத் தொடர்ந்து தயாரிக்கவேண்டும் என்று எனது மாப்பிளை ரவி மோகன்தான் கூறினார். அந்த ஆலோசனையால்தான் நான் அடுத்தது படங்களையும் தயாரிக்கும் நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டேன்.

மேலும் அவரை வைத்தும் அடங்க மறு, பூமி, மற்றும் சைரன் என அடுத்தடுத்த படங்களைத் தயாரித்திருக்கிறேன். இந்த படங்களுக்காகக் கிட்டத்தட்ட நானும் சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் பைனான்சியர்களிடம் இருந்து கடன் பெற்றிருக்கிறேன். அதில் சுமார் 24 சதவீதம் ரவி மோகனுக்கும் ஊதியம் வாங்கியிருக்கிறேன். இந்த படங்கள் மூலமாக நடிகர் ரவி மோகனுக்கும் பல கோடி கடன்கள் ஏற்படுவதாக அவர் என்ன மீது குற்றம் சாட்டியுள்ளார். இருக்கும் நியாயத்தை நானா எங்கு கேட்டாலும் ஆதாரத்துடன் நிரூபிப்பேன். மேலும் நானா மகனாக நினைக்கும் ரவி மோகனுக்கு ஒரு வேண்டுகோள், எனது பேரக் குழந்தைகளின் சந்தோஷத்திற்காகவும், எனது மகளுடன் இணைந்து வாழவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நான் எனது மகளை வாழாவெட்டியாக பார்க்கவிரும்பவில்லை, எந்த தாயும் தனது மகளை வாழாவெட்டியாக பார்க்க விரும்பமாட்டாள். மேலும் ஊடக நண்பர்களும், நானா படும் வேதனையைப் புரிந்துகொண்டு சித்திரவதை செய்யும் மாமியார் என்று என்று என் மீது புதிய சுமையை சுமத்தாதீர்கள் என்று தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் கூறியுள்ளார்.

அதிகப்படியான தண்ணீர் குடிப்பதும் ஆபத்தா? இவ்வளவு ரிஸ்க் இருக்கு!
அதிகப்படியான தண்ணீர் குடிப்பதும் ஆபத்தா? இவ்வளவு ரிஸ்க் இருக்கு!...
எது திராவிட மாடல், எது காவி மாடல் என தெளிவுபடுத்திய மு.க ஸ்டாலின்
எது திராவிட மாடல், எது காவி மாடல் என தெளிவுபடுத்திய மு.க ஸ்டாலின்...
வெடிக்கும் மோதல்.. கூட்டத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் அன்புமணி..
வெடிக்கும் மோதல்.. கூட்டத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் அன்புமணி.....
மைசூரில் உங்களுக்குத் தெரியாத 7 சாகச விளையாட்டுகள் பற்றி இதோ..!
மைசூரில் உங்களுக்குத் தெரியாத 7 சாகச விளையாட்டுகள் பற்றி இதோ..!...
ஸ்மார்ட்போன் பேட்டரி சீக்கிரம் காலியாகுதா? இத டிரை பண்ணுங்க!
ஸ்மார்ட்போன் பேட்டரி சீக்கிரம் காலியாகுதா? இத டிரை பண்ணுங்க!...
மழையால் ஐபிஎல் 2025க்கு மீண்டும் சதி..? தவிக்கும் கேகேஆர்..!
மழையால் ஐபிஎல் 2025க்கு மீண்டும் சதி..? தவிக்கும் கேகேஆர்..!...
கமலின் தக் லைஃப் பட டிரெய்லரில் மிகப்பெரிய டிவிஸ்ட்!
கமலின் தக் லைஃப் பட டிரெய்லரில் மிகப்பெரிய டிவிஸ்ட்!...
இது நடந்தால் நான் இந்தியா வருவேன்! விராட் கோலிக்கு ஆதரவாக ஏபிடி!
இது நடந்தால் நான் இந்தியா வருவேன்! விராட் கோலிக்கு ஆதரவாக ஏபிடி!...
சாலையில் ஏற்பட்ட பள்ளம்: தலைகீழாக கவிழ்ந்த காருக்குள் இருந்த பேபி
சாலையில் ஏற்பட்ட பள்ளம்: தலைகீழாக கவிழ்ந்த காருக்குள் இருந்த பேபி...
சிகரெட் வாங்கித்தர மறுத்த மென்பொருள் ஊழியர் கொலை..!
சிகரெட் வாங்கித்தர மறுத்த மென்பொருள் ஊழியர் கொலை..!...
ஷ்ரேயாஸ் ஐயர் புறக்கணிப்பா..? இந்தியா ஏ அணியில் இல்லாத இடம்..!
ஷ்ரேயாஸ் ஐயர் புறக்கணிப்பா..? இந்தியா ஏ அணியில் இல்லாத இடம்..!...