மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஆகஸ்ட் 8, 2026 இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை ஆகஸ்ட் 8, 2026 இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, ஆகஸ்ட் 8 : தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஆகஸ்ட் 8, 2026 இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், சுமார் 5.8 கி.மீ. முதல் 7.6 கி.மீ. உயரம் வரை வட கடலோர தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாக தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
இதன் காரணமாக ஆகஸ்ட் 8, 2026 இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : கரூர் பணி நியமனம் ரத்து விவகாரம்.. மேல்முறையீட்டு மனுக்கள் ஏற்பு.. உச்ச நீதிமன்றத்தில் ஆக.14-ல் விசாரணை!!




அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 9, 2026 நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது. மேலும் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவித்துள்ளது.
மேலும் ஆகஸ்ட் 10, 2026 திங்கள் கிழமை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் அறிவித்துள்ளது. இதனையடுத்து ஆகஸ்ட் 11, 2026 முதல் ஆகஸ்ட் 14, 2026 வரை 4 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதையும் படிக்க : நில ஆவண முறைகேடு வழக்கு.. மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மீது குற்றச்சாட்டுகள் பதிவு!
வெப்பநிலை குறித்த அறிவிப்பு
ஆகஸ்ட் 08, 2026 மற்றும் ஆகஸ்ட் 09, 2026 இன்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு என தெரிவித்துள்ளது. மேலும் 10, 2026 முதல் ஆகஸ்ட் 12. 2026 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை ஆகஸ்ட் 8, 2026 இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.