AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தொகுதி மறுவரையறை: எம்பிக்கள் கூட்டத்தில் பேசப்பட்டது என்ன! பரபரப்பு தகவல்கள்!

Tamilnadu MPs Meeting : தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற எம்பிக்கள் கூட்டத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில், மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகள் குறித்து கட்சிகளின் தலைவர்கள் மற்றும் எம். பி. க்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

தொகுதி மறுவரையறை: எம்பிக்கள் கூட்டத்தில் பேசப்பட்டது என்ன! பரபரப்பு தகவல்கள்!
தமிழக எம்பிக்கள் கூட்டத்தில் முதல்வர் ஜோசப் விஜய்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 08 Aug 2026 17:53 PM IST

தமிழகத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் தமிழக எம்பிக்கள் கூட்டம் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டமானது சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற நிலையில் தற்போது நிறைவடைந்துள்ளது. இதில், தொகுதி மறுவரையறை தொடர்பாக என்ன ஆலோசிக்கப்பட்டது என்பது குறித்து கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் எம்பிக்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். இதில்,  மத்திய பாஜக அரசு தொகுதி மறுவரையில் ஆஃபர் தருவதாக ஏமாற்று வேலை செய்து வருகிறது. தமிழகத்திற்கு தொகுதி மறுவரையறை தேவையில்லை. தமிழகத்தை ஏமாற்றுவதற்கான வேலையாகும். தமிழகத்துக்கு துரோகம் நடக்காமல் நாங்கள் பார்த்துக் கொள்வோம். தொகுதி மறுவரையறை மூலமாக தமிழகத்தின் அதிகாரத்தை பறிக்கும் செயலாகும்.

தற்போதைய எம்.பி.க்களின் எண்ணிக்கை தொடரவேண்டும்

மேலும், தமிழக மற்றும் தென் மாநிலங்களின் உரிமைகளை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தொகுதி மறு வரையரைக்காக முயற்சி செய்து வருகிறோம். தொகுதி மறு வரை மசோதா என்பது ஏமாற்று வேலை ஆகும். ஏற்கனவே சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டபோது தமிழகத்திற்கு இழப்பு ஏற்பட்டது. இதில், தமிழகத்தில் இருந்த எம்பிக்களின் எண்ணிக்கை 41 லிருந்து 39- ஆக குறைந்திருந்தது. எனவே, தற்போது இருக்கும் எம்பிக்களின் எண்ணிக்கை தொடர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

மேலும் படிக்க: தொகுதி மறுவரையறை மசோதா.. தமிழகத்துக்கு இவ்வளவு தொகுதிகள் கிடைக்குமா.. வெளியானது உத்தேச பட்டியல்!

தோழைமை கட்சிகளின் கோரிக்கையை ஏற்ற முதல்வர் விஜய்

தமிழகத்துக்கு அநீதியை இழைப்பதற்கு மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. தொகுதி மறு சீரமைப்பு தமிழகத்துக்கு தேவையில்லை. சில கட்சிகள் பாஜகவுடன் மறைமுகமாக ஒப்பந்தம் செய்துள்ளது. தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பதற்காக சில கட்சிகள் முடிவு செய்திருப்பது வருத்தத்துக்குரியதாகும். அனைத்து கட்சிகளின் ஒருமித்த கருத்துக்களோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது தொகுதி மறு சீரமைப்புக்கு எதிராக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் விரைவில் வெளியாக உள்ளது. தோழமை கட்சிகளின் கருத்துக்களை முதல்வர் ஜோசப் விஜய் ஏற்றுள்ளார்.

மேலும் படிக்க: தொகுதி மறுசீரமைப்பு.. முதல்வர் விஜய் தலைமையில் எம்பிக்கள் கூட்டம் தொடக்கம்! திமுக- அதிமுக புறக்கணிப்பு!

Follow Us