AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெகவில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு அங்கீகாரம்.. கட்சி தலைமை கொடுத்த கிப்ட்!

Former Minister Given Posts TVK : தமிழக வெற்றிக் கழகத்தில் முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம். ஆர். விஜயபாஸ்கர், முன்னாள் எம், எல். ஏ. இசக்கி சுப்பையா உள்ளிட்டோருக்கு பதவி வழங்கி கட்சியின் தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது .

தவெகவில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு அங்கீகாரம்.. கட்சி தலைமை கொடுத்த கிப்ட்!
சி. விஜயபாஸ்கர்- எம்.ஆர்.விஜயபாஸ்கர்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 08 Aug 2026 19:42 PM IST

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் பல்வேறு அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டது. அதில், ஒன்றாக அதிமுகவில் அங்கம் வகித்து வந்த முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர், எம். ஆர். விஜயபாஸ்கர், முன்னாள் எம்எல்ஏக்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா, இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததுடன், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இவர்களுக்கு, தமிழக வெற்றிக் கழகத்தில் கட்சிப் பதவிகள் எதுவும் வழங்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், முதல் அமைச்சருமான ஜோசப் விஜய் பல்வேறு பதவிகளை அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக, தமிழக வெற்றி கழகத்தின் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மேலும் படிக்க: தொகுதி மறுசீரமைப்பு.. முதல்வர் விஜய் தலைமையில் எம்பிக்கள் கூட்டம் தொடக்கம்! திமுக- அதிமுக புறக்கணிப்பு!

அமைப்பு செயலர்கள் – துணை பொதுச்செயலர்கள்

தமிழக வெற்றி கழகம் தொடங்கப்பட்டதிலிருந்து மக்கள் தன்னெழுச்சியாகவும் பெருந்திரளாகவும் தங்களின் ஆதரவை அழித்து விடுவதை இந்த நாடே அறியும் தமிழக வெற்றி கழகம் மக்களுக்காக எப்பொழுதுமே முதலும் முன்னோடியமாக விளங்கி வருகிறது இதனால் அதனுடைய கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவது அவசியமாகிறது அந்த வகையில் மாவட்ட அமைப்பு செயலாளர்கள் மற்றும் துணை பொது செயலாளர் கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  • சி. விஜயபாஸ்கர்- புதுக்கோட்டை மாவட்ட அமைப்பு செயலாளர்.
  • எம். ஆர். விஜயபாஸ்கர்- கரூர் மாவட்ட அமைப்பு செயலாளர்.
  • முன்னாள் எம்எல்ஏ இசக்கி சுப்பையா ( அம்பாசமுத்திரம் தொகுதி) – தென்காசி மாவட்ட அமைப்பு செயலாளர்.
  • முன்னாள் எம்எல்ஏ மரகதம் குமரவேல் ( மதுராந்தகம் தொகுதி) – துணை பொதுச் செயலாளர்.
  • எஸ். ராஜகோபால்- துணை பொதுச் செயலாளர் ( நாங்குநேரி) .
  • ஜாகீர் உசேன் – துணை பொதுச் செயலாளர் ( அம்பாசமுத்திரம்) .
  • வி. குமார் -துணை பொதுச் செயலாளர் ( பல்லாவரம்) .
  • எஸ். யுவராஜ் – துணை பொதுச் செயலாளர் ( சிங்காநல்லூர்) .
  • சி.வி. தினகரன் – துணை பொதுச் செயலாளர் ( திருப்போரூர்) .
  • கே. மணிகண்டன் துணை பொதுச் செயலாளர் ( ஆவடி).
  • அருள்ராஜ்- துணை பொதுச் செயலாளர் ( திருவெறும்பூர் ) .
  • ஆர். எஸ். மணிகண்டன் – துணை பொதுச் செயலாளர் ( வீரபாண்டி) .
  • சாமுவேல்ராஜ் – துணை பொதுச் செயலாளர் ( தூத்துக்குடி)
  • எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு கூடுதலாக துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்சியினர் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்

புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். கட்சியின் ஆக்கபூர்வ பணிகள் குறித்து எனது உத்தரவு மற்றும் ஆலோசனையின் படியும் பொதுச் செயலாளர் ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுடன் இணைந்து இந்த புதிய நிர்வாகிகள் தங்களது கட்சிப் பணிகளை மேற்கொள்வார்கள். கட்சியின் தோழர்கள் இவர்களுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தொகுதி மறுவரையறை: எம்பிக்கள் கூட்டத்தில் பேசப்பட்டது என்ன! பரபரப்பு தகவல்கள்!

Follow Us