AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கடலூரில் பெருஞ்சோகம்.. குளிக்க சென்ற மாணவி தீக்குளித்த தற்கொலை.. போலீசார் தீவிர விசாரணை!

Cuddalore Student Self Harm : கடலூர் மாவட்டத்தில் உறவினர் வீட்டில் பிளஸ் 2 படித்து வரும் மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கடலூரில் பெருஞ்சோகம்.. குளிக்க சென்ற மாணவி தீக்குளித்த தற்கொலை.. போலீசார் தீவிர விசாரணை!
மாதிரி புகைப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 08 Aug 2026 18:29 PM IST

கடலூர் மாவட்டம், திட்டக்குடி கோழியூர் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகன் துர்கா ( 16 வயது). இவர், திட்டக்குடி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று மாணவி துர்கா தனது பெற்றோரிடம் உறவினர் வீட்டுக்கு சென்று குளித்து விட்டு வருவதாக கூறி சென்றார். ஆனால், வெகு நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் துர்கா குளிக்க சென்ற வீட்டுக்கு சென்று பார்த்தனர். அங்கு, அவர் உடல் கருகிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், சம்பவம் குறித்து திட்டக்குடி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தீக்குளித்து பிளஸ் 2 மாணவி தற்கொலை

தகவலின் பேரில், திட்டக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு உடல் கூறாய்வு மேற்கொள்வதற்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் தடய அறிவியல் நிபுணர்கள் பல்வேறு தடயங்களை சேகரித்தனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், மாணவி துர்கா உறவினர் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து தன் மீது ஊற்றி தனக்குத்தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

மேலும் படிக்க: விபத்துகளில் முதலிடம் – காப்பாற்றுவதில் கடைசி இடம் – தமிழ்நாட்டுக்கு என்ன ஆச்சு?

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

மேலும், மாணவியின் இந்த விபரீத முடிவுக்கு என்ன காரணம் என்பது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர் அவரது நண்பர்கள் ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் அதில், கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகம்

இருப்பினும், முதல் கட்ட விசாரணையில் மாணவி துர்கா தற்கொலை செய்து கொண்டதாகவே தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உறவினர் வீட்டில் திடீரென மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் மட்டுமின்றி அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை எண்ணத்தை தவிர்க்க:

(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)

மேலும் படிக்க: ராமநாதபுரத்தில் அதிரடி.. ரூ50,000 லஞ்சம் வாங்கிய RDO கையும் களவுமாக கைது.. லஞ்ச ஒழிப்பு போலீஸ் நடவடிக்கை!

Follow Us