AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் ஜீவா – கோகுல் கூட்டணி

Director Gokul and actor Jiiva are reuniting after 15 years : ரௌத்திரம் படத்தின் கூட்டணிகளான இயக்குநர் கோகுல் மற்றும் நடிகர் ஜீவா இருவரும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் ஜீவா – கோகுல் கூட்டணி
ஜீவாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 May 2026 16:55 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜீவா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அதன்படி நடிகர் ஜீவா நாயகனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்தே அதிக அளவில் இளைஞர்களை கவரும் வகையில் கதைகளை தொடர்ந்து தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் ஜீவா நடிப்பில் கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ரௌத்திரம். இந்தப் படத்தினை இயக்குநர் கோகுல் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகர் ஜீவா உடன் இணைந்து நடிகர்கள் ஷ்ரியா சரண், பிரகாஷ் ராஜ்,  ஜெயபிரகாஷ், பாபு ஆண்டனி, லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், சத்யன், ஸ்ரீநாத், விஜே மோனிகா, கணேஷ் ஆச்சார்யா, சையத், வினோத் முன்னா, சைத்தன்யா கிருஷ்ணன், செண்ட்ராயன், ராஜேந்திரன், சையத் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் ஜீவா – கோகுல் கூட்டணி:

ஆக்‌ஷன் ட்ராமா பாணியில் உருவான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் இயக்குநர் கோகுல் மற்றும் ஜீவா இருவரும் மீண்டு இணைந்து படம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ ராதை என்ற தற்காலிகத் தலைப்புடன் உருவாகிவரும் அடுத்த திரைப்படம், முழுமையானதொரு கலகலப்பான பொழுதுபோக்குத் திரைப்படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Jana Nayagan: ஜன நாயகன் பட தயாரிப்பாளருடன் ஆளுநரை சந்தித்த தளபதி விஜய்.. பின்னணி என்ன?

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சூர்யா 47 படத்தில் சௌபின் நடிக்கிறாரா? வைரலாகும் போட்டோ

Follow Us