வெளியானது ஆக்ஷன் கிங் அர்ஜுனின் ப்ளாஸ்ட் பட ட்ரெய்லர்!
Blast Movie Trailer Out Now | ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் பீஸ்ட். இந்த பீஸ்ட் படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுவாக தமிழக மக்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய மக்களிடையே ஆக்ஷன் படங்களுக்கு வரவேற்பு அதிகம். மிகவும் பரபரப்பான படங்களை பார்க்க வேண்டும் என்றால் அவர்கள் அதிகம் தேடுவது ஆக்ஷன் படமாகவே இருக்கும். இதன் காரணமாகவே ஆங்கிளத்தில் வெளியாகும் ஆக்ஷன் படங்களை தேடித் தேடிப் பார்ப்பார்கள். அப்படி இருக்கும் ரசிகர்களுக்கு தென்னிந்திய சினிமாவில் குறிப்பாக தமிழ் சினிமாவில் ஆக்ஷனுக்கு என்றே ஒரு நாயகனாக வந்தார் நடிகர் அர்ஜுன். இவரது நடிப்பில் வெளியான பெரும்பான்மையான படங்கள் தொடர்ந்து ஆக்ஷன் காட்சிகளை மையமாக வைத்தே வெளியாகி இருந்தது. அந்தப் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் முழுக்க முழுக்க ஆக்ஷன் பாணியில் தற்போது நடிகர் அர்ஜுன் நடித்துள்ள படம் பீஸ்ட். இயக்குநர் சுபாஸ் கே ராஜ் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன் உடன் இணைந்து நடிகர்கள் பிரீத்தி முகுந்த் மற்றும் அபிராமி இருவரும் நடித்து உள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




எங்க தப்பு நடந்தாலும் தட்டிக் கேக்கனும்… யாரா இருந்தாலும்:
இந்தப் படத்தில் அர்ஜுனின் மனைவியாக அபிராமியும் மகளாக பிரீத்தி முகுந்தும் நடித்துள்ளார். கராத்தே மாஸ்டரான அர்ஜுன் சிறு வயதில் இருந்தே தனது மகளுக்கு கராத்தே சொல்லி கொடுக்கும் போது எங்கு தப்பு நடந்தாலும் கேட்க வேண்டும் என்றும் சொல்லிக் கொடுக்கிறார். அதிலும் குடும்பமாக அவர்கள் அநீதியை எதிர்க்கிறார்கள். இப்படி இருக்கும் சூழலில் வில்லனிடம் ஒரு பிரச்சனையில் சிக்கும் அந்த குடும்பத்தினர் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் வருகின்ற 28-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… Mari Selvaraj: திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்த இயக்குநர் மாரி செல்வராஜ்!
பீஸ்ட் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#BlastTrailer is OUT NOW…
Time to enter full #Blast mode 🔥▶️ https://t.co/by4OsMuYS3#BlastFromMay28#KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh@archanakalpathi @aishkalpathi @venkat_manickam @Ags_production@akarjunofficial @PreityMukundan @abhiramiact… pic.twitter.com/o78o2C9AYT
— AGS Entertainment (@Ags_production) May 17, 2026
Also Read… Chiranjeevi: பெத்தி பட 3 நிமிட ட்ரெய்லர்.. முழுக்க அனல் பறக்கும் – அப்டேட் கொடுத்த சிரஞ்சீவி!