Ranabaali: விஜய் தேவரகொண்டாவின் ரணபாலி படத்தின் ‘தீரம் தீரம்’ பாடல் வெளியீடு!
Dheeram Dheeram song ; தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் சிறந்த இளம் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் விஜய் தேவரகொண்டா. இவரின் நடிப்பில் ரணபாலி என்ற படமானது உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்திலிருந்து தீரம் தீரம் என்ற 2வது சிங்கிள் வெளியாகியுள்ளது. இது இணையத்தில் வைரலாகிவருகிறது.
தெலுங்கு சினிமாவில் மக்கள் மத்தியில் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் விஜய் தேவரகொண்டா (Vijay Deverakonda). இவரின் நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் புத்தம் புதிய மற்றும் பிரம்மாண்டமான படமாக உருவாக்கப்பட்டுள்ளதுதான் ரணபாலி (Ranabaali). இந்த படமானது கடந்த 1960களில் இந்தியாவில் நடந்த பஞ்சம் தொடர்பான அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குநர் ராகுல் சங்கிருத்யன் (Rahul Sankrityan) இயக்கியுள்ள நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமானது மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்க, அவருக்கு இணையாக நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அஜய் – அட்லு இசையமைத்துள்ள நிலையில், ஏற்கனவே முதல் சிங்கிள் வெளியாகிவிட்டது. தற்போது அதை தொடர்ந்து, தீரம் தீரம் என்ற இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: ராம யுகத்தின் ஆரம்பம்… ரன்பீர் – சாய் பல்லவியின் ராமாயணா பார்ட் : 1 பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
விஜய் தேவரகொண்டாவின் ரணபாலி திரைப்படத்தின் 2வது சிங்கிள் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Turn up your speakers and experience this thunderous divine roar 🔱🔥🎼
#Ranabaali second single #Kobali (Telugu) out now ❤🔥
▶️ https://t.co/YtjCgvtYIoAn #AjayAtul Musical
Other Languages Coming shortly 🔱
#Ranabaali GRAND RELEASE WORLDWIDE ON 16.10.26.
#NeverForget #RanabaaliOnOct16th
— Mythri Movie Makers (@MythriOfficial) October 11, 2026
ரணபாலி திரைப்படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் அப்டேட்:
இந்த ரணபாலி படமானது 60-களில் நடக்கும் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா ரணபாலி என்ற வேடத்தில் நடித்துள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா ஜெயம்மா என்ற வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் நடிகை கஸ்தூரி, ஹாலிவுட் நடிகர் ஆர்னோல்ட் வொல்ஸூ மற்றும் பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: பிக் பாஸில் இந்த வாரத்திற்கான எவிக்ஷன் ஃப்ரீ பாஸை பெற்ற ஜேசன்!
இந்த படமானது பான் இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திவருகிறது. அந்த விதத்தில் இப்படத்திற்கு யு/ஏ 16+ என்ற சென்சார் வழங்கப்படுகிறதாம். மேலும் இப்படமானது மொத்தமாக 2 மணி நேரம் 50 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்டுள்ளதாக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது.