AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரணபலி படத்திலிருந்து வெளியானது ஏதய்யா சாமி பாடலின் லிரிக்கள் வீடியோ

Yedhayya Saami Lyrical Video | நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படம் ரணபலி. இந்தப் படத்தில் இருந்து ஏதய்யா சாமி பாடலின் லிரிக்கள் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

ரணபலி படத்திலிருந்து வெளியானது ஏதய்யா சாமி பாடலின் லிரிக்கள் வீடியோ
ஏதய்யா சாமிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Sep 2026 16:36 PM IST

தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவரது நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தொடர்ந்து பான் இந்திய மொழிகளில் உள்ள சினிமா ரசிகர்களிடையேயும் அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ரணபலி. தெலுங்கு சினிமாவில் இந்தப் படம் உருவாகி இருந்தாலும் தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் ராகுல் சங்கிருத்யன் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து உள்ளார். மேலும் சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களின் ஜொடி படத்தில் இணைந்துள்ள நிலையில் இந்தப் படத்தை ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போதே இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரணபலி படத்திலிருந்து வெளியானது ஏதய்யா சாமி லிரிக்கள் வீடியோ:

இந்திய சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக உள்ள மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து உள்ள நிலையில் ரணபலி படம் வருகின்ற அக்டோபர் மாதம் 16-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படத்தில் இருந்து இன்று பான் இந்திய மொழிகளில் லிரிக்கல் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ் மொழியில் ஏதய்யா சாமி என்று அந்தப் பாடலின் லிரிக்கள் வீடியோவிற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடல் தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… 25 ஆண்டுகளைக் கடந்தது பாண்டவர் பூமி படம் – சேரன் வெளியிட்ட பதிவு

ரணபலி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Mandaadi: மண்டாடி வகையரா.. சூரியின் முதல் ரூ 100 கோடி வசூல்.. வெற்றி மிதப்பில் மண்டாடி படக்குழு!

Follow Us