AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Nani: நான் பார்த்த சட்டமன்றக் காட்சிகளில் அவர் கலக்கி வருகிறார்.. முதல்வர் விஜய் குறித்து பேசிய நானி!

Nani Praises CM Vijay: தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் நானி. இவரின் நடிப்பில் தமிழில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம்தான் தி பாரடைஸ். இந்த படத்தின் தமிழ் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நானி, முதலமைச்சர் விஜய் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

Nani: நான் பார்த்த சட்டமன்றக் காட்சிகளில் அவர் கலக்கி வருகிறார்.. முதல்வர் விஜய் குறித்து பேசிய நானி!
முதல்வர் விஜய் பற்றி நானிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 18 Sep 2026 13:14 PM IST

தென்னிந்திய மொழிகளில் பிரபலமான இருந்துவருபவர் நேச்சுரல் ஸ்டார் நானி (Nani). இவரின் நடிப்பில் பான் இந்திய மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக கடந்த 2025ம் ஆண்டில் 3 ஹிட் 3 (HIT 3) என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படமானது இவருக்கு ஓரளவு வரவேற்பைகொடுத்திருந்தது. இந்த படத்திற்கு பிறகு நானியின் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுவரும் படம்தான் தி பாரடைஸ் (The Paradise). இதை இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா (Srikanth Odela) இயக்க, இதுவரை இவரின் இசையில் இப்படத்திலிருந்து 2 பாடல்கள் வெளியான நிலையில், சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் நடிகர் நானி ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் (Kayadu Lohar) நடித்துள்ளார்.

இந்த படமானது பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், 2026ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதியில் வெளியாகிறது. அதை முன்னிட்டு இப்படத்தின் புரோமோஷன் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. சமீபத்தில் தமிழ் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நானி, தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: ரூ 300 கோடி வசூல் சாதனையில் பெத்தலகேம் குடும்ப யூனிட் படம்.. நெகிழ்ச்சியான பதிவை பகிர்ந்த நிவின் பாலி!

தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து நடிகர் நானி பேசிய விஷயம்:

அந்த நிகழ்ச்சியின்போது பேசிய நானி, “இது அற்புதம் சார், நடிகர்கள் மீது நாம் காட்டும் அன்பு அப்படிப்பட்டது. விஜய் சார் இங்கு மிகப்பெரிய ஸ்டார். தமிழ் மக்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கை அப்படிப்பட்டது. அவர் பல பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் செய்திருக்கிறார், என்பதற்காக மட்டும் அவர்கள் அவருக்கு வாக்களிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் 27-வது படத்திற்கு சட்ட சிக்கல்? வைரலாகும் தகவல்

பல ஆண்டுகளாக, அவரைத் தங்களுக்குத் தெரியும் என்பது போல உணர வைத்து, அனைவரையும் ஒரு குடும்பம் போல உணர வைத்ததன் விளைவுதான் இது என்று நான் நினைக்கிறேன். பல ஆண்டுகளாகக் கட்டியெழுப்பப்பட்ட நம்பிக்கை இது. அவரது அடுத்த சில வருட ஆட்சி அற்புதமாக இருக்கும் என்று நம்புகிறேன். நான் பார்த்த சட்டமன்றக் காட்சிகளில், அவர் கலக்கி வருகிறார்” என அதில் அவர் வெளிப்படையாக பேசியிருந்தார்.

தி பாரடைஸ் படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அதை முன்னிட்டு ப்ரோமோஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. மேலும் இன்னும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகாத நிலையில், இப்படம் ட்ரெய்லர் இல்லாமலே வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us