Gold Price : நேற்று உயர்வு, இன்று சரிவு.. தங்கத்தின் விலையில் என்னதான் நடக்குது?.. இன்றைய நிலவரம்!
Gold and Silver Price On 20th October | சென்னையில் நாளுக்கு நாள் தங்கம் விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், நேற்று (அக்டோபர் 19, 2026) உயர்வை சந்தித்த தங்கம், இன்று (அக்டோபர் 20, 2026) சரிவை சந்தித்துள்ளது.
சென்னை, அக்டோபர் 20 : சென்னையில் தங்கம் விலை (Gold Price) நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று (அக்டோபர் 20, 2026) தங்கம் விலை சரிவை சந்தித்துள்ளது. அதாவது, தங்கம் கிராமுக்கு ரூ.80 சரிந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் (Silver Price) மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம் விலை
உலக அளவில் ஏற்படும் பல்வேறு மாற்றங்கள் காரணமாக தங்கம் விலையும் நாளுக்கு நாள் மாற்றம் அடைந்து வருகிறது. குறிப்பாக புவிசார் பதற்றம், பணவீக்கம் ஆகியவை தங்கம் விலை கடும் ஏற்ற, இறக்கங்களை சந்திக்க முக்கிய காரணிகளாக உள்ளன. அந்த வகையில், சென்னையில் நேற்று (அக்டோபர் 19, 2026) உயர்வை சந்தித்த தங்கம் விலை, இன்று சரிவை சந்தித்துள்ளது. வெள்ளியோ தொடர்ந்து 6வது நாளாக எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : Gold Price : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.. ஒரு கிராம் எவ்வளவு.. இன்றைய நிலவரம் இதுதான்!
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.13,490-க்கும், சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,07,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14,716-க்கும், ஒரு சவரன் ரூ.1,17,728-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை தொடர்ந்து 6வது நாளாக மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ.240-க்கும், ஒரு கிலோ ரூ.2,40,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : Jio IPO: 2ஜி பயனர்கள் முதல் செயற்கை நுண்ணறிவு வரை – ஜியோவின் முன்னால் காத்திருக்கும் வாய்ப்புகள்