Gold Price : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.. ஒரு கிராம் எவ்வளவு.. இன்றைய நிலவரம் இதுதான்!
Gold and Silver Price In Chennai Today | சென்னையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் உள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, அக்டோபர் 19 : பல்வேறு காரணிகள் காரணமாக சென்னையில் தங்கம் விலை (Gold Price) நாள்தோறும் மாற்றமடைந்து வருகிறது. அந்த வகையில், சென்னையி, இன்று தங்கம் விலை உயர்வை சந்தித்துள்ளது. அதாவது 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்துள்ளது. ஆனால், வெள்ளி விலையோ (Silver Price) மாற்றமில்லாமல் உள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம், வெள்ளி
புவிசார் பதற்றம், தங்கத்தின் மீதான தேவை மற்றும் இறுப்பு, உலக மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்துவது ஆகியவை தங்கம் விலை மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளாக உள்ளன. இவற்றின் காரணமாக தங்கம் விலை சில நாட்கள் உயர்வை சந்திக்கும் நிலையில், சில நாட்கள் தொடர் சரிவை சந்திக்கிறது. இவ்வாறு, தொடர்ந்து மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை தங்கம் சந்தித்து வருகிறது.
இதையும் படிங்க : ரேஷன கார்டு பயனர்களுக்கு வெளியான 2 முக்கிய அப்டேட்டுகள்.. முழு விவரம்!




உயர்ந்தது தங்கம் விலை, வெள்ளி நிலவரம் என்ன?
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,570-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,08,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14,804-க்கும், ஒரு சவரன் ரூ.1,18,432-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையோ மாற்றம் ஏற்படாமல் ஒரு கிராம் ரூ.240-க்கும், ஒரு கிலோ ரூ.2,40,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : வீடு Vs வணிக இடம்.. இந்த ஆண்டு பண்டிகைக்கு எதில் முதலீடு செய்யலாம்?
தங்கம் இத்தகைய மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருவதன் காரணமாக தற்போது தங்கத்தில் முதலீடு செய்வது சரியானதா, இல்லையா என தெரியாமல் பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் குழம்பி வருகின்றனர்.