AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ.5,000 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?.. முழு விவரம் இதோ!

Sukanya Samriddhi Yojana Investment | அரசு அஞ்சலங்கள் மூலம் செயல்படுத்தும் சிறந்த திட்டமாக செல்வமகள் சேமிப்பு திட்டம் உள்ளது. இந்த நிலையில், இந்த திட்டத்தில் மாதம் ரூ.5,000 முதலீடு செய்வதன் மூலம் எவ்வளவு லாபம் பெற முடியும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ.5,000 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?.. முழு விவரம் இதோ!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 16 Oct 2026 21:19 PM IST

அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை (Saving and Investment Schemes) செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களின் ஒன்றுதான் செல்வமகள் சேமிப்பு திட்டம், இந்த திட்டத்தை சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY – Sukanya Samriddhi Yojana) என்றும் பிரபலமாக அழைப்பர். இந்த நிலையில், இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ.5,000 முதலீடு செய்து எவ்வளவு லாபம் பெற முடியும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கான சிறந்த திட்டம்

பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை நிதி பாதுகாப்பு மிக்கதாக மாற்றும் வகையில் செயல்படுத்தப்படும் திட்டம் தான் இந்த செல்வமகள் சேமிப்பு திட்டம். அதன்படி, ஏராளமான பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. எனவே, இதில் நீண்ட காலம் முதலீடு செய்யும் பட்சத்தில் நல்ல லாபத்தை பெற முடியும்.

இதையும் படிங்க : Jio IPO: ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ தேதிகள் அறிவிப்பு – முக்கியத் தகவல்களைப் பகிர்ந்த இஷா அம்பானி

செல்வமகள் சேமிப்பு திட்டம் – எப்படி முதலீடு செய்ய வேண்டும்?

இந்த திட்டத்தில் பெண் குழந்தைகள் பிறந்து அவர்களது 10 வயதுக்குள்ளாக முதலீடு செய்ய வேண்டும். கணக்கு தொடங்கி, அந்த குழந்தைக்கு 15 வயதாகும் வரை தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். அதற்கு பிறகு முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. காரணம், அதற்கு பிறகு கூட்டு வட்டி செய்யு  மேஜிக் மூலம் உங்களது பணத்திற்கு நல்ல லாபம் கிடைக்க தொடங்கும்.

இதையும் படிங்க : Jio IPO: நாட்டின் டேட்டா பயன்பாட்டில் 60% பங்களிக்கும் ஜியோ – எதிர்கால வியூகங்களை வெளிப்படுத்திய ஆகாஷ் அம்பானி

இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த நிலையில், இந்த திட்டத்தில் மாதம் ரூ.5,000 முதலீடு செய்து வந்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என பார்க்கலாம். மாதம் ரூ.5,000 முதலீடு செய்தால் ஒரு ஆண்டில் ரூ.60,000 முதலீடு செய்திருப்பீர்கள். இதுவே 15 ஆண்டுகளுக்கு ரூ.9 லட்சம் முதலீடு செய்திருப்பீர்கள்.

ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி என கணக்கிட்டால் திட்டத்தின் முதிர்வின்போது ரூ.27.73 லட்சம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us