AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தொடர் விலை உயர்வை சந்திக்கும் அரிசி.. மேலும் விலை அதிகரிக்குமா?.. முக்கிய தகவல்!

Tamil Nadu Inflation Crisis | இந்தியாவிலேயே அதிக சில்லறை பணவீக்கம் கொண்ட மாநிலமாக தம்ழிநாடு மாறியுள்ளது. இந்த நிலையில் தான், அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை பல மடங்கு உயர்வை .சந்தித்துள்ளது. இந்த நிலையில், அரிசி விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.

தொடர் விலை உயர்வை சந்திக்கும் அரிசி.. மேலும் விலை அதிகரிக்குமா?.. முக்கிய தகவல்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 15 Oct 2026 15:00 PM IST

இந்தியாவில் கடந்த சில நாட்களாக பணவீக்கம் (Inflation) அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஜனவரி மாதம் வெறும் 2.75 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம் (Retail Inflation) செப்டம்பரில் 5.54 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் அதிக பணவீக்கம் கொண மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது. இதன் விளைவாக தமிழகத்தில் உணவு பொருட்களின் விலை கடும் விலை உயர்வை சந்தித்து வருகிறது. குறிப்பாக அரிசி விலை ஒவ்வொரு மாதமும் தொடர் விலை உயர்வை சந்தித்து வருகிறது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தின் இந்த கடுமையான பொருளாதார சிக்கல் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொடர்ந்து உயர்வை சந்தித்து வரும் அரிசி விலை

தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உணவு பொருட்களின் விலை நாளுக்கு நாள் கடும் விலை உயர்வை சந்தித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அரிசி விலை உயர்ந்து வருகிறது. தமிழர்களின் உணவில் முக்கிய உணவாக உள்ளது அரிசி உணவு. இந்த நிலையில் தான், பொன்னி, இட்லி அரிசி, பச்சரிசி என மக்கள் அதிகம் பயன்படுத்தும் அரிசிகளின் விலை மூட்டைக்கு ரூ.300 வரை விலை உயர்வை சந்தித்துள்ளது.

இதையும் படிங்க : ரெப்போ வட்டி விகித உயர்வு எதிரொலி.. கடன்களுக்கான வட்டியை உயர்த்திய வங்கிகள்!

தொடர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

அரிசி விலை இவ்வாறு தொடர் விலை உயர்வை சந்தித்து வரும் நிலையில், இனி வரும் காலங்களிலும் அரிசி விலை உயருமா என்ற கேள்விக்கு தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் துளசிமணி விளக்கம் அளித்துள்ளார். குறிப்பிட்ட சில அரிசி ரகம் வெளி மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்துள்ளதால் அவற்றின் விலை அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : தீபாவளிக்கு பிறகு அமலுக்கு வரும் எம்டிஆர் கட்டணம்.. NPCI முக்கிய அறிவிப்பு!

இனிமேலும் அரிசி விலை உயர வாய்ப்பு இல்லை என்றும், இரண்டாம் பருவ நெல் பயிர்கள் வந்தவுடன் அரிசி விலை குறையும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Follow Us