AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

8வது ஊதியக்குழு.. சம்பளத்தை ரூ.18,000-ல் இருந்து ரூ.69,000 ஆக உயர்த்த கோரிக்கை!

8th Pay Commission | மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்துவது குறித்து 8வது ஊதிய கமிஷன் கோரிக்கைகளை கேட்டறிந்து வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு மாத சம்பளத்தை ரூ.18,000-ல் இருந்து ரூ.69,000 ஆக உயர்த்த கோரிக்கை எழுந்துள்ள நிலையில், அது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

8வது ஊதியக்குழு.. சம்பளத்தை ரூ.18,000-ல் இருந்து ரூ.69,000 ஆக உயர்த்த கோரிக்கை!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 14 Oct 2026 00:50 AM IST

மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதிய உயர்வு ஆகியவற்றை குறித்து முடிவு செய்வதற்கான பணிகளை 8வது சம்பள கமிஷன் (8th Pay Commission) தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சென்று மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிய சங்கங்களின் கோரிக்கைகளை சம்பள கமிஷன் அதிகாரிகள் கேட்டு வருகின்றனர். இந்த நிலையில், 8வது ஊதியக்குழு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பல்வேறு அம்சங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட கூட்டம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரு சென்ற கமிஷன் அதிகாரிகளிடம் மத்திய அரசு ஓய்வூதிய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் நேரில் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். அதாவது, மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம், பென்ஷன், பிட்மென்ட் ஃபேக்டர், படிகள் மற்றும் பணியாளர் கட்டமைப்பு மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதம் மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க : Gold Price : தொடர் உயர்வுக்கு பிறகு 2வது நாளாக சரிந்த தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம்!

ரூ.18,000-ல் இருந்து ரூ.69,000 ஆக உயர்த்த கோரிக்கை

அப்போது தேசிய கவுன்சில் – கூட்டு ஆலோசனை குழுவின் பரித்துரையின் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தை குறைந்தபட்சம் ரூ.18,000 முதல் ரூ.69,000 வரை உயர்த்த வேண்டும் என கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பள உயர்வுக்கு 3.833 ஃபிட்மெண்ட் ஃபேக்டரை பயன்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : உலகை வியக்க வைக்கும் இந்தியாவின் GDP வளர்ச்சி.. சர்வதேச நாணய நிதியம் சொன்ன ஹேப்பி நியூஸ்!

இதேபோல பல்வேறு மாநிலங்களுக்கு சென்று சம்பள கமிஷன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி அதன் பேரில் ஃபிட்மெண்ட் ஃபேக்டரை பரிந்துறை செய்ய உள்ளனர். இந்த பரிந்துறைகளின் அடிப்படையில் தான் சம்பள உயர்வு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது. எனவே, விரைவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய தகவல் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us