AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

செப்டம்பரில் அதிரடியாக உயர்ந்த சில்லறை பணவீக்கம்.. அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயருமா?

India's Retail Inflation Jumps to 5.54 Percentage in September | இந்தியாவில் பணவீக்கம் நாளுக்கு நாள் உயர்வை சந்தித்து வருகிறது. அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்தில் 4.83 சதவீதமாக இருந்த பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 5.54 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 13 Oct 2026 23:31 PM IST
இந்தியாவில் செப்டம்பர் மாதம் சில்லறை பணவீக்கம் அதிகரித்துள்ளது. அதாவது ஆகஸ்ட் மாதத்தில் வெறும் 4.83 சதவீதமாக இருந்த பணவீக்கம், செப்டம்பர் மாதத்தில் 5.54 சதவீதமாக அதிகரித்துள்ளது. வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்வால் இது நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

1 / 5
நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், நாட்டிலேயே அதிகபட்சமாக சில்லறை பணவீக்கம் 6.81 சதவீதமாக பதிவாகியுள்ளது. 2026 ஆம் ஆண்டு தொடக்கத்துடன் ஒப்பிடுகையில் இது மிகவும் அதிகமாக உள்ளது. காரணம், ஜனவரியில் 2.75 சதவீதம், பிப்ரவரியில் 3.21 சதவீதம், மார்ச் மாதத்தில் 3.40 சதவீதமாக பணவீக்கம் இருந்துள்ளது.

2 / 5
இதுவே, ஏப்ரல் மாதத்தில் 3.48 சதவீதம், மே மாதத்தில் 3.93 சதவீதம் மற்றும் ஜூன் மாதத்தில் 4.38 சதவீதமாக இருந்துள்ளது. மேலும், ஜூலை மாத பணவீக்கம் 4.45 சதவீதமாகவும், ஆகஸ்ட் மாத பணவீக்கம் 4.83 சதவீதமாகவும் இருந்துள்ளது. இந்த நிலையில் தான் தொடர்ச்சியாக 8வது முறை செப்டம்பர் மாதத்திலும் பணவீக்கம் உயர்ந்துள்ளது.

3 / 5
தேசிய புள்ளியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 5.97 சதவீதமாக இருந்த நிலையில், அது செப்டம்பர் மாதத்தில் 7.74 சதவீதமாக உயர்ந்து ஒட்டுமொத்த பணவீக்க உயர்வுக்கும் காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

4 / 5
பொருட்களின் அடிப்படையில் கணக்கிட்டு பார்க்கும் பட்சத்தில் வெங்காயம் 108.09 சதவீதம், வெள்ளி நகைகள் 87.8 சதவீதம், இஞ்சி 62.85 சதவீதம், பூண்டு 54.62 சதவீதம், எலுமிச்சை 36.41 சதவீதம் ஆகியவற்றின் விலை உயர்வு அதிகமாக பதிவாகியுள்ளது. ஆனால், உருளைக்கிழங்கு, தேங்காய், தக்காளி, வெண்டைக்காய், மோட்டார் கார்கள் ஆகியவற்றின் பணவீக்கம் எதிர்மறையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

5 / 5
Follow Us