AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

UPI பரிவர்த்தனைகளுக்கு MDR கட்டணம் அமல்படுத்துவது ஒத்திவைப்பு! தீபாவளிக்குப் பிறகு புதிய நடைமுறை அமல் – NPCI அறிவிப்பு

UPI Charges:முன்னதாக, அக்டோபர் 15ஆம் தேதி முதல் புதிய கட்டண நடைமுறையை அமல்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பண்டிகைக் காலத்தில் மக்கள் அதிக அளவில் பொருட்களை வாங்குவதால், இந்த நடைமுறையைச் செயல்படுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

UPI பரிவர்த்தனைகளுக்கு MDR கட்டணம் அமல்படுத்துவது ஒத்திவைப்பு! தீபாவளிக்குப் பிறகு புதிய நடைமுறை அமல் – NPCI அறிவிப்பு
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 13 Oct 2026 15:36 PM IST

அக்டோபர் 13, 2026: வணிகர்களின் கோரிக்கையை ஏற்று, யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வணிகர் தள்ளுபடி விகிதம் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை அமல்படுத்துவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்குப் பிறகு நவம்பர் இரண்டாவது வாரத்தில் இந்த நடைமுறை அமலுக்கு வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுபிஐ கட்டண வசூல் ஒத்திவைப்பு:

முன்னதாக, அக்டோபர் 15ஆம் தேதி முதல் புதிய கட்டண நடைமுறையை அமல்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பண்டிகைக் காலத்தில் மக்கள் அதிக அளவில் பொருட்களை வாங்குவதால், இந்த நடைமுறையைச் செயல்படுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, அக்டோபர் 13ஆம் தேதி நடைபெற்ற யுபிஐ மற்றும் சேவைகள் வழிநடத்தல் குழுக் கூட்டத்தில், குறிப்பிட்ட சில வணிகர் பரிவர்த்தனைகளுக்கு MDR கட்டணத்தை தீபாவளிக்குப் பிறகு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகம்  தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. புதிய நடைமுறை அமல்படுத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க: உலகை வியக்க வைக்கும் இந்தியாவின் GDP வளர்ச்சி.. சர்வதேச நாணய நிதியம் சொன்ன ஹேப்பி நியூஸ்!

UPI பரிவர்த்தனைகளுக்கு எவ்வளவு கட்டணம்?

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற UPI வழிநடத்தல் குழுக் கூட்டத்தில், ரூ.2,000-க்கு அதிகமான குறிப்பிட்ட UPI வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத MDR கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி, ரூ.2,000 பரிவர்த்தனைக்கு ரூ.8-ம், ரூ.10,000 பரிவர்த்தனைக்கு ரூ.40-ம் கட்டணமாகக் கணக்கிடப்படும். அதேநேரத்தில், ரயில்வே, தொலைத்தொடர்பு, காப்பீடு, எரிபொருள் மற்றும் விவசாய இடுபொருட்கள் போன்ற குறிப்பிட்ட துறைகளில் ரூ.2,000-க்கு அதிகமான பரிவர்த்தனைகளுக்கு ரூ.5 என்ற நிலையான MDR கட்டணம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டணங்கள் வாடிக்கையாளர்களிடம் நேரடியாக வசூலிக்கப்படாது என்றும், வணிகர்களே ஏற்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், ரூ.75,000 அல்லது அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு அதிகபட்ச கட்டணமாக ரூ.300 நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிநபர்களுக்கு இடையிலான பணப் பரிமாற்றங்கள் மற்றும் அன்றாடம் மேற்கொள்ளப்படும் பெரும்பாலான வணிகப் பரிவர்த்தனைகள் தொடர்ந்து இலவசமாகவே இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: உயர்த்தப்பட்ட PF உச்சவரம்பு.. அப்போ EPS?.. EPFO முக்கிய விளக்கம்!

MDR கட்டணம் ஏன் கொண்டுவரப்படுகிறது?

UPI பணப்பரிவர்த்தனை முறையைத் தொடர்ந்து இயக்குவதற்குத் தேவையான தொழில்நுட்பக் கட்டமைப்பு, இணையப் பாதுகாப்பு, மோசடிகளைத் தடுப்பது, சேவையின் தடையற்ற செயல்பாடு மற்றும் வாடிக்கையாளர் ஆதரவு உள்ளிட்ட செலவுகளை ஈடுகட்டுவதற்காக MDR கட்டணம் அறிமுகப்படுத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய நிதியமைச்சகத்தின் செப்டம்பர் மாதக் கேள்வி-பதில் விளக்கத்தின்படி, தொழில்துறை மதிப்பீடுகளை மேற்கோள் காட்டி, UPI சேவைகளை இயக்குவதற்கு ஆண்டுக்கு சுமார் ரூ.20,000 கோடி செலவாகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அரசின் ஊக்கத்தொகையை மட்டுமே நம்பி நீண்டகாலத்துக்கு இந்தக் கட்டமைப்பை இயக்குவது நிலையான நிதி மாதிரியாக இருக்காது என்பது மத்திய அரசின் கருத்தாகும்.

வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் தாக்கம் என்ன?

ரூ.2,000-க்கு அதிகமான UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிப்பது சிறு கடைகள் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை அதிகம் நம்பியிருக்கும் சேவை நிறுவனங்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தக்கூடும் என ரூப்யாபைசா.காம் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் முகேஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.

இந்தக் கட்டணங்கள் பணப்பரிவர்த்தனை நிறுவனங்களின் செயல்பாட்டுச் செலவுகளை ஈடுகட்ட உதவலாம். இருப்பினும், கட்டணம் அதிகமாக இருந்தால் வணிகர்கள் UPI பரிவர்த்தனைகளை ஏற்கத் தயங்கும் நிலை ஏற்படலாம் என்றும், சில வணிகர்கள் அந்தச் செலவை ஈடுகட்ட பொருட்களின் விலையை உயர்த்தி வாடிக்கையாளர்களிடம் சுமத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

 

Follow Us