Gold Price : தொடர் உயர்வுக்கு பிறகு 2வது நாளாக சரிந்த தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம்!
Gold and Silver Price In Chennai Today | சென்னையில் தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று இரண்டாவது நாளாக தங்கம் விலை சரிவை சந்தித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, அக்டோபர் 13 : சென்னையில் தங்கம் விலை (Gold Price) நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் தான், சென்னையில் இன்று (அக்டோபர் 13, 2026) தங்கம் விலை சரிவை சந்தித்துள்ளது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர் உயர்வை சந்தித்து வந்த நிலையில், தற்போது சரிந்துள்ளது. வெள்ளி விலையில் (Silver Price) எந்தவித மாற்றமும் இல்லாமல் உள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தொடர் உயர்வுக்கு பிறகு சரிந்த தங்கம் விலை
புவிசார் பதற்றம், தங்கத்தின் தேவை மற்றும் இறுப்பு ஆகியவற்றை மையமாக கொண்டு தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில் தான், கால சூழலுக்கு ஏற்ப 2026 ஆம் ஆண்டில் தங்கம் விலை அவ்வப்போது தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களாக தொடர் உயர்வை சந்தித்து வந்த தங்கம், இன்று இரண்டாவது நாளாக சரிவை சந்தித்துள்ளது.
இதையும் படிங்க : வாரந்தோறும் பெண்களுக்காக சிறப்பு கடன் முகாம்கள்.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!
இரண்டாவது நாளாக சரிந்த தங்கம் விலை
சென்னையில் இன்று (அக்டோபர் 13, 2026) 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.13,685-க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.1,09,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14,929-க்கும், ஒரு சவரன் ரூ.1,19,432-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.