AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

6 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா வழக்கு: “சபாநாயகரின் நடவடிக்கை செல்லும்!”.. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

High Court Verdict on 6 AIADMK MLAs Resignation Case: அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த 6 எம்எல்ஏக்களின் ராஜினாமாவைச் சபாநாயகர் ஏற்றது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், தகுதி நீக்க நடவடிக்கை குறித்து 2 மாதங்களுக்குள் சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

6 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா வழக்கு: “சபாநாயகரின் நடவடிக்கை செல்லும்!”.. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
அதிமுக எம்எல்ஏக்கள்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 13 Oct 2026 11:33 AM IST

சென்னை, அக்.13: தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அதிமுகவை சேர்ந்த ஆறு சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா மற்றும் தகுதி நீக்க விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் மிக முக்கியத் தீர்ப்பை வழங்கி உள்ளது. அதிமுகவிலிருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்ததுடன், சட்டமன்ற வாக்கெடுப்பின் போது தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த ஆறு அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமாவைச் சபாநாயகர் ஏற்றுக் கொண்டதை எதிர்த்து அதிமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. தலைமை நீதிபதி சுசந்த தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருண்முருகன் அடங்கிய அமர்வு விசாரித்த இந்த வழக்கில், சபாநாயகரின் நடவடிக்கை செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதுடன், தகுதி நீக்க மனுக்கள் மீது இரண்டு மாத காலத்திற்குள் உரிய முடிவை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: “அதிமுகவிலிருந்து மேலும் 15 MLA-க்கள் தவெகவுக்கு வருவார்கள்”.. இபிஎஸ்-க்கு அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த அதிர்ச்சி!!

வழக்கின் பின்னணியும் அதிமுகவின் வாதமும்:

அதிமுகவைச் சேர்ந்த ஆறு எம்எல்ஏக்களான மாரகாந்தகம் குமாரவேல், தாராபுரம் சேகர், அம்பாசமுத்திரம் எஸ். இளையராஜா, ஜெயகுமார், கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் விராலிமலை சி. விஜயபாஸ்கர் ஆகியோர் கட்சி மாறி தவெகவை ஆதரித்துச் செயல்பட்டனர். இதைக் கண்டித்து அதிமுக தரப்பில் அவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி சபாநாயகரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தத் தகுதி நீக்கப் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அதற்குள் அந்த எம்எல்ஏக்களின் ராஜினாமாவைச் சபாநாயகர் திடீரென்று ஏற்றுக்கொண்டார். ராஜினாமா செய்த அடுத்த சில நிமிடங்களிலேயே அவர்கள் தலைமைச் செயலகத்தில் அமைச்சரைச் சந்தித்துத் தவெகவில் இணைந்ததாகவும் கூறப்பட்டது. முறையான விசாரணை நடத்தப்படாமலும், தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருக்கும்போதே ராஜினாமா ஏற்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டி, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல். ரவி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கொரடா வழக்கு தொடர்ந்தனர்.

சபாநாயகரின் நடவடிக்கைக்கு அங்கீகாரம்:

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு, சபாநாயகர் தரப்பு வாதங்களை ஏற்றுத் தீர்ப்பை வழங்கியுள்ளது. சபாநாயகர் தனது உத்தரவில், எம்எல்ஏக்கள் சுய விருப்பத்தின்பேரிலே பதவிகளை ராஜினாமா செய்ய விரும்பினார்களா என்பது குறித்து விசாரித்துத் திருப்தி அடைந்த பின்னரே அவற்றை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்திருந்தார். மேலும், ஒரு சட்டமன்ற உறுப்பினர் பதவியில் தொடர விரும்பவில்லை எனில், அவரைத் தொடர்ந்து பதவியில் இருக்கும்படி வற்புறுத்த முடியாது என்றும், ராஜினாமாவை ஏற்பது சட்டப்படியானது என்றும் வாதாடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழத்தைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. அதேசமயம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளையும் நீதிமன்றம் நிராகரித்தது.

இதையும் படிக்க: “இனி எங்கள் வழி தனி வழி”.. கூட்டணியில் இல்லாத திமுகவை நோக்கிக் கூவுவதை நிறுத்துங்கள்.. மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!!

2 மாதங்களுக்குள் தகுதி நீக்கம் குறித்த முடிவு:

தீர்ப்பின் மற்றொரு முக்கிய அம்சமாக, இந்த ஆறு எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை குறித்த மனு சபாநாயகர் முன்பு நிலுவையில் உள்ளதால், அது குறித்து அடுத்த இரண்டு மாத காலத்திற்குள் சபாநாயகர் உரிய முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையே, ராஜினாமா செய்த அந்த எம்எல்ஏக்களில் சிலர் ஏற்கனவே மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதால், அவர்கள் மீது தற்போதைய நிலையில் நேரடியான சட்ட நடவடிக்கை எடுப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதாகவும் சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர். எவ்வாறayினும், சபாநாயகரின் நடவடிக்கை செல்லும் என்ற உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, இரண்டு மாதங்களுக்குப் பிறகு சபாநாயகர் எடுக்கப் போகும் முடிவு என்ன என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Follow Us