மூன்று ஆண்டுகளில் கசந்த காதல் திருமணம்.. கணவன் – மனைவி விஷம் குடித்து தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்!
Couple Killed Themselves In A Three Years Of Marriage Life | திருவள்ளூரில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துக்கொண்ட தம்பதி, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர், அக்டோபர் 13 : திருவள்ளூர் (Thiruvallur) அருகே திருமணம் ஆன மூன்று ஆண்டுகளில் தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில், இருவரும் விஷயம் குடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன் குடித்துவிட்டு வந்த சண்டை போட்டதால் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த நிலையில், கணவன் – மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்ட அதிர்ச்சி சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
காதல் திருமணம் – கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு
திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் என்ற 29 வயது கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த மஞ்சுளா என்ற 22 வயது பெண்ணை காதலித்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துக்கொண்டுள்ளார். திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகியும், இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. யுவராஜுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ள நிலையில், அவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்து வந்ததன் காரணமாக கணவன் – மனைவி இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.
இதையும் படிங்க : தலைமைச் செயலகத்தில் திடீர் மின்தடை: காரணம் இதுதான் – அரசு விளக்கம்




விஷம் குடித்து அடுத்தடுத்து உயிரிழந்த தம்பதி – சோகம்
இந்த நிலையில் தான், அக்டோபர் 10, 2026 அன்று யுவராஜ் மீண்டும் மது அருந்திவிட்டு வீட்டிக்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மஞ்சுளா, கணவரை கண்டித்துள்ளார். ஆனால், யுவராஜ் தனது தந்தை மற்றும் மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான மஞ்சுளா வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனை கண்ட யுவராஜ், தானும் அந்த மருந்தை குடித்துள்ளார்.
இதையும் படிங்க : ஆந்திரா செல்லும் முதல்வர் விஜய் – வெளியான பயண திட்டம்
இந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளனர். அவர்கள் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராஜூகாந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (அக்டோபர் 12, 2026) இருவரும் ஒருவர் பின் ஒருவராக பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.