AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஷூட்டிங் முடித்துச் சென்ற உதவி இயக்குநருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.. நாகர்கோவிலில் ஷாக் சம்பவம்!

Assistant Director Brutally Attacked After Film Shoot | நாகர்கோவிலில் திரைப்பட உதவி இயக்குநர் ஒருவர், ஹூட்டிங் முடித்து வீடு திரும்ப நின்றுக்கொண்டு இருந்த நிலையில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷூட்டிங் முடித்துச் சென்ற உதவி இயக்குநருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.. நாகர்கோவிலில் ஷாக் சம்பவம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 13 Oct 2026 07:46 AM IST

நாகர்கோவில், அக்டோபர் 13 : நாகர்கோவில் (Nagercoil) நான்கு வழிச்சாலை பகுதியில் நடைபெற்ற சினிமா படபிடிப்பை காண வந்த திரைப்பட உதவி இயக்குனருக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொடூர கொலை முயற்சி சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

படபிடிப்பை காண வந்த உதவி இயக்குநருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை நான்கு வழிச்சாலை பகுதியில் “ஆல் மோஸ்ட் நல்லவன்” என்ற திரைப்படத்தின் படபிடிப்பு கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்துள்ளது. இந்த திரைப்படத்தில் ராஜு ஜெயமோகன் என்பவர் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படபிடிப்பை காண கார்த்திகை சீலன் என்ற 44 வயது உதவி இயக்குநர் சென்றுள்ளார். நேற்று (அக்டோபர் 12, 2026) அதிகாலை படபிடிப்பு முடிந்து குழிவினர் கிளம்பியுள்ளனர். அப்போது கார்த்திகை சீலன் மற்றும் சிலர் நான்கு வழிச்சாலை பகுதியின் நின்றுக்கொண்டு இருந்தனர்.

இதையும் படிங்க : ஆந்திரா செல்லும் முதல்வர் விஜய் – வெளியான பயண திட்டம்

சரமாரியாக வெட்டிய மர்ம கும்பல்

இந்த நிலையில் தான், அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர், தான் மறைத்து வைத்திருந்தன் அரிவாளை கொண்டு கார்த்திகை சீலனை சரமாரியாக வெட்டியுள்ளார். உடலில் சில இடங்களில்  வெட்டு விழுந்து நிலையில், அதிக ரத்தம் வெளியேறி அவர் சரிந்து விழுந்தார். அவரை கடுமையாக தாக்கிய அந்த நபர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த நிலையில் தான், அங்கிருந்தவர்கள் கார்த்திகை சீலனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : தனியாரிடம் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35க்கு கொள்முதல் – மின்வெட்டை சமாளிக்க அரசு நடவடிக்கை

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வழக்குப்பதிவு செய்து கொலைவெறி தாக்குதல் நடத்தியது யார் என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us