Tamil Nadu weather report: இந்த 9 மாவட்டங்களில் இன்று மழை கொட்டும்.. வானிலை மையம் கொடுத்த அலர்ட்!!
Tamil Nadu weather today: தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதோடு, வரும் 15ம் தேதி முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், மற்ற பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது.
சென்னை, அக்.13: தமிழகத்தில் இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில், ‘தமிழகத்தில் அடுத்த 3 நாட்களில் தென்மேற்கு பருவமழை விலகி, வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. தென்கிழக்கு வழங்கக் கடலில் இன்று (அக்.13) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அக்.15ம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
இதையும் படிக்க : தனியாரிடம் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35க்கு கொள்முதல் – மின்வெட்டை சமாளிக்க அரசு நடவடிக்கை
இன்று மழைக்கு வாய்ப்பு:
அந்தவகையில், இன்று (அக்.13) தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
வரும் நாட்களில் மழை வாய்ப்பு:
தொடர்ந்து, நாளை (அக்.14) சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அக்.15-ம் தேதி கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, ஈரோடு, சேலம், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதனைத்தொடர்ந்து, அக்16-ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மதுரை, திண்டுக்கல், கடலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். அக்.17-ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி ஆகிய 21 மாவட்டங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை மாற்றம்:
வரும் அக்.14ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும். வடக்கு உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இதையும் படிக்க : மதுபோதையில் வருவதால் தொல்லை.. தூங்கிய கணவர் மீது டீசல் ஊற்றி தீ வைப்பு.. காரைக்காலில் கொதித்தெழுந்த மனைவி!
சென்னை வானிலை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.