AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி!.. இபிஎஸ் தரப்பு கூட்டங்களை புறக்கணிக்க திட்டமிடும் எஸ்.பி.வேலுமணி தரப்பு!

AIADMK Internal Rift: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்.பி.வேலுமணி தரப்புக்கும் இடையே மீண்டும் மோதல் போக்கு வெடித்துள்ளது. கட்சியின் 55வது தொடக்க நாள் விழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்களை எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட சீனியர் தலைவர்கள் புறக்கணிக்கத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி!.. இபிஎஸ் தரப்பு கூட்டங்களை புறக்கணிக்க திட்டமிடும் எஸ்.பி.வேலுமணி தரப்பு!
எடப்பாடி பழனிசாமி, வேலுமணி அணி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 13 Oct 2026 09:46 AM IST

அக்டோபர், 13: தமிழகத்தில் எதிர்க்கட்சியான அதிமுகவின் உள்விவகாரங்கள் அவ்வப்போது அரசியல் அரங்கில் பெரும் விவாதப் பொருளாக மாறி வருவது வழக்கம். கட்சித் தலைமை மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு இடையே நிலவும் கருத்து வேறுபாடுகள் பல சமயங்களில் வெளிப்படையான சலசலப்புகளை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், தற்போது அதிமுகவின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது ஆதரவு சீனியர் தலைவர்கள் தரப்பு, கட்சி தலைமைக்கு எதிராக மீண்டும் அதிருப்தி முகாமில் இறங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளில் உடன்பாடின்றி, வரவிருக்கும் கட்சி நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்க அவர்கள் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படும் செய்தி, அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: “இனி எங்கள் வழி தனி வழி”.. கூட்டணியில் இல்லாத திமுகவை நோக்கிக் கூவுவதை நிறுத்துங்கள்.. மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!!

புறக்கணிக்கத் திட்டமிடும் சீனியர்கள்:

அதிமுகவின் 55வது தொடக்க நாள் விழாவை முன்னிட்டு வரும் 17ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் பிரம்மாண்டமான பொதுக்கூட்டங்கள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளுக்குத் தலைமைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சிகளிலும் பொதுக்கூட்டங்களிலும் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன் மற்றும் தங்கமணி உள்ளிட்ட முக்கிய மூத்த தலைவர்கள் பங்கேற்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. கடந்த சில நாட்களாக இவர்களுக்கிடையே நடைபெற்ற தொடர் ஆலோசனைக் கூட்டங்களின் வெளிப்பாடாகவே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே நீடிக்கும் இடைவெளி:

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கட்சி நடவடிக்கைகளில் இருந்து எஸ்.பி.வேலுமணி தரப்பு கடந்த சில காலங்களாகவே சற்று ஒதுங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, கடந்த காலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் பணிகள், கட்சி சார்ந்த ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மாவட்ட வாரியான பொதுக்கூட்டங்களிலும் கூட இந்த முன்னணி தலைவர்கள் முழுமையான ஈடுபாடு காட்டாமல் தவிர்த்து வந்தனர். தற்போது கட்சித் தொடக்க நாள் விழாவைப் புறக்கணிக்கும் முடிவுக்கு அவர்கள் வந்துிருப்பது, அதிமுகவிற்குள்ளே நீடித்து வரும் உள்கட்சி பூசலையும், தலைமைக்கும் மூத்த நிர்வாகிகளுக்கும் இடையேயான அதிகார மோதலையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிக்க : அதிமுகவில் மீண்டும் வெடித்த உள்கட்சி பூசல்.. எடப்பாடிக்கு முற்றும் நெருக்கடி.. எஸ்.பி.வேலுமணி தலைமையில் 3-ஆவது நாளாக ஆலோசனை

அரசியல் களத்தில் இதன் தாக்கம்:

2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நிறைவடைந்த நிலையில், தொடர்ந்து மீதமுள்ள தொகுதகளுக்கான இடைத்தேர்தல்களை நோக்கிய வியூகங்களைக் கட்சிகள் வகுத்து வரும் சூழலில், அதிமுகவிற்குள் தலைவர்களுக்கு இடையே நிலவும் இந்த முரண்பாடுகள் கட்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடையேயும் தொண்டர்களிடையேயும் கட்சியின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் வகையில் தலைமை இந்தச் சிக்கல்களுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. எஸ்.பி.வேலுமணி தரப்பினரின் இந்த நகர்வு வரவிருக்கும் நாட்களில் அதிமுகவின் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow Us