AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வாரந்தோறும் பெண்களுக்காக சிறப்பு கடன் முகாம்கள்.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

Tamil Nadu Government Loans | கூட்டுறவுத்துறை மூலம் பெண்கள் தொழில் தொடங்க கடன் வாங்க ஏதுவாக வாரம் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழக அரசின் இந்த முக்கிய அறிவிப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.

வாரந்தோறும் பெண்களுக்காக சிறப்பு கடன் முகாம்கள்.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 12 Oct 2026 18:47 PM IST

கூட்டுறவுத்துறை மூலம் பெண்கள் தொழில் தொடங்க கடன் வாங்குவதற்காக வாரம் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government) அசத்தல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் குறித்து அரசு கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடி கடன்

தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ஆண்டிற்கான 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க அரசு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடையும் வகையில் தமிழகத்தில் வாரம்தோறும் சிறப்பு கடன் முகாம்கள் மற்றும் கடன் மேளாக்களை நடத்த கூட்டுறவுத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தான், இனி வாரம்தோறும் கூட்டுறவுத்துறை சார்பாக கடன் முகாம்கaள் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : முதலீடு செய்ய சிறந்த ஃபார்முலா.. அசட் அலோகேஷன்.. அப்படி என்றால் என்ன?

கடன் திட்டங்களுக்கான சிறப்பு முகாம்கள்

தமிழகத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமைகளில் சிங்கப்பெண் கடன்கள் மற்றும் வீட்டு வசதி கடன்களுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறும். அதேபோல, வெள்ளிக்கிழமைகளில் இதர முன்னுரிமை துறை கடன் திட்டங்களுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இந்த சிறப்பு முகாமில் விவசாய கடன்கள், ஊரக தொழில் கடன்கள், வீட்டு வசதி கடன்கள், திருநங்கையருக்கான கடன்கள், மின்சார ஆட்டோ கடன்கள் மற்றும் இதர முன்னுரிமை துறை கடன் திட்டங்கள் அடங்கும்.

இதையும் படிங்க : 2026-ல் 16% சரிந்த தங்கம் விலை.. இனி வரும் நாட்களில் எப்படி இருக்கும்?

கடன் வழங்கும் முகாம்கள் குறித்த விவரங்கள் பொதுமக்களை சென்றடையும் வகையில், சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே பெண்கள், சுய தொழில் செய்யும் நபர்கள், கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள நபர்கள் அனைவரும் இந்த வாராத்திர முகாம்களை பயன்படுத்துக்கொள்ளலாம். இந்த முகாம்கள் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டு அன்றைய தினமே கடன்களுக்கான ஒப்புதல் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Follow Us