டிக் டாக் வீடியோ மூலம் தொடங்கப்பட்ட தொழில்.. ரூ.32,000 கோடி நிறுவனத்தை உருவாக்கி அசத்திய தோழிகள்!
Two Girl Best Friends Build Multi-Crore Pickle Business | இரண்டு தோழிகள் தாங்கள் பார்த்த டிக் டாக் வீடியோ மூலம் ஒரு தொழிலை உருவாக்கி தற்போது சுமார் ரூ.32,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை கட்டமைத்துள்ளனர். அவர்களின் சாதனை பயணம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால், தொழிலில் இருக்கும் ஆபத்துகள் மற்றும் நிலையற்ற தன்மை காரணமாக பலரும் தொழிலில் இறங்க தயங்குவர். அப்படி துணிந்து தொழிலில் இறங்கும் பலரும் தோல்வியை சந்தித்த கதைகளும் உள்ளன. இந்த நிலையில், டிக் டாக்கில் பார்த்த ஒரு வீடியோ மூலம் தொழில் தொடங்கி, இரண்டு தோழிகள் தற்போது கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகின்றனர். இந்த நிலையில், யார் அவர்கள், அப்படி என்ன தொழில் செய்தார்கள் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
டிக் டாக்கில் பார்த்த வீடியோ மூலம் தொழில் தொடங்கி சாதனை
2022 ஆம் ஆண்டு சதர்ன் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் லியா மார்க்கஸ் மற்றும் யாசன் பக்தியார். இவர்கள் இருவரும் கல்லூரியில் இருந்தே நல்ல நண்பர்கள். இவர்கள் 2023 ஆம் ஆண்டு இருவரும் தற்செயலாக ஊறுகாய் தொடர்பான வீடியோ ஒன்றை ஒருவருக்கொருவர் பகிர்ந்துக்கொண்டுள்ளனர். அந்த சமையத்தில், ஆன்லைன் மூலம் பொதுமக்கள் அதிக அளவில் ஊறுகாய் வாங்குவதை அவர்கள் கவனித்துள்ளனர். அவர்கள் அதையே தொழிலாக செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க : Gold : ஆசைக்காட்டி மோசம் செய்த தங்கம்.. மூன்றே நாட்களில் ரூ.1,760 உயர்ந்தது!
குட் கேர்ள் ஸ்னாக்ஸ் நிறுவனத்தை தொடங்கினர்
அதன்படி, இருவரும் தாங்கள் செய்துக்கொண்டு இருந்த வேலையை விட்டுவிட்டு குட் கேர்ள் ஸ்னாக்ஸ் என்று தங்களது நிறுவனத்துக்கு பெயர் வைத்தனர். அதன் பின்னர் 2024 ஆம் ஆண்டு அவர்கள் ஹாட் கேர்ள் பிக்கிள்ஸ் என்று பெயர் மாற்றம் செய்தனர். அதன்படி அவர்கள் தங்களது முதல் உற்பத்தி பொருளை சந்தையில் அறிமுகம் செய்தனர். ஆர்ம்ப காலக்கட்டத்தில் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்து வந்த இவர்கள், பின்னர் நிறுவனங்களிடம் கேட்டு ஹோல்சேல் புட் மார்க்கெட்டில் தங்களது பொருட்களை விற்பனை செய்ய தொடங்கினர்.
இதையும் படிங்க : சோலார் பேனல் அமைக்க ரூ.1 லட்சம் வரை மானியம் – விண்ணப்பிப்பது எப்படி?
பிரபல பல்பொருள் அங்காடியில் தங்களுடைய பொருட்களை விற்பனை செய்ய தொடங்கினர். ஆரம்பத்தில் ஜாடிகளில் மட்டும் ஊறுகாய் விற்பனை செய்து வந்தனர். இப்போது வாடிக்கையாளர்கள் எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் பாக்கெட்டிலும் விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு சிறிய சிறிய மாற்றங்களை செய்து, ரூ.80 கோடி மதிப்புக்கொண்ட நிறுவனத்தை கட்டமைத்துள்ளனர்.
இவர்கள் உருவாக்கியுள்ள இந்த நிறுவனத்தின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.32,000 கோடி ஆகும்.