AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

உயர்த்தப்பட்ட PF உச்சவரம்பு.. அப்போ EPS?.. EPFO முக்கிய விளக்கம்!

EPFO Clarifies EPS Eligibility | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் பிஎஃப் உச்ச வரம்பை அதிரடியாக உயர்த்தியுள்ளது. அது செப்டம்பர் மாதம் முதல் அமலில் உள்ளது. இந்த நிலையில், இபிஎஸ் குறித்து பயனர்கள் மத்தியில் இருந்த குழப்பத்திற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

உயர்த்தப்பட்ட PF உச்சவரம்பு.. அப்போ EPS?.. EPFO முக்கிய விளக்கம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 12 Oct 2026 22:21 PM IST

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) பிஎஃப் (PF – Provident Fund) உச்ச வரம்பை உயர்த்தியுள்ள நிலையில், ஊழியர் ஓய்வூதிய திட்டத்தில் யார் யார் தகுதியானவர்கள் என்பது குறித்து குழப்பம் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் அதற்கு விளக்கம் அளித்துள்ளது. எனவே, இபிஎஸ் (EPS – Employee Pension Scheme) திட்டம் குறித்து அளிக்கப்பட்டுள்ள விளக்கம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரூ.1,800-ல் இருந்து ரூ.3,000 ஆக உயர்ந்த பிஎஃப் பங்களிப்பு

பிஎஃப் சம்பள உச்ச வரம்பு உயர்த்தப்பட்டதன் காரணமாக பிஎஃப் பங்களிப்பு ரூ.1,800-ல் இருந்து ரூ.3,000 ஆக அதிகரித்துள்ளது. இதனால், ஊழியர்களின் கைக்கு வரும் வருமானம் குறைந்துள்ளது. ஆனால், எதிர்காலத்தை நிதி பாதுகாப்பு மிக்கதாக அது மாற்றியுள்ளது. பிஎஃப் சம்பள வரம்பு உயர்த்தப்பட்டதன் மூலம், மாதந்தோறும் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை சம்பளம் சுமார் 51 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கட்டாய பிஎஃப் வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : ரெப்போ வட்டி விகிதம் உயர்வு.. இவர்களுக்கு கவலை இல்லை.. லாபம் தான்!

மூன்று திட்டங்களின் கீழ் பயன்பெறுவார்கள்

  1. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி
  2. ஊழியர் ஓய்வூதிய திட்டம்
  3. ஊழியர்களின் வைப்புத்தொகையுடன் இணைக்கப்பட்ட காப்பீட்டு திட்டம்

இதில் இபிஎஃஸ் எனப்படும் ஊழியர் ஓய்வூதிய திட்டத்தில் எந்த உறுப்பினர்கள் தகுதி பெறுவார்கள் என்றால், மாதம் ரூ.25,000 அல்லது அதற்கும் குறைவாக உள்ளவர்கள் விதிமுறைக்கு உட்பட்டு, இபிஎஸ் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுவார்கள்.

இதையும் படிங்க : முதலீடு செய்ய சிறந்த ஃபார்முலா.. அசட் அலோகேஷன்.. அப்படி என்றால் என்ன?

அதாவது புதியதாக பிஎஃப் பணம் பிடித்தம் செய்யப்படும் ஊழியர்களுக்கு தகுதிக்கு ஏற்ப ஓய்வூதிய பலன்கள் கிடைக்கும். அதன்படி, உங்களது அடிப்படை சம்பளம் ரூ.25,000-க்கு மேல் இருந்தால் உங்களுக்கு ஓய்வூதிய பலன்கள் கட்டாயமில்லை என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Follow Us