AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

செயலற்ற வங்கி கணக்கை மீண்டும் செயல்படுத்துவது எப்படி?.. கட்டணம் செலுத்த வேண்டுமா?

How to Unfreeze Inactive Bank Accounts | ஒரு வங்கி கணக்கில் இரண்டு ஆண்டுகள் எந்தவித பண பரிவர்த்தனையும் நடக்கவில்லை என்றால் அந்த கணக்கு செயலற்ற கணக்காக மாறிவிடும். இந்த நிலையில், அந்த கணக்கை மீண்டும் எப்படி பயன்பாட்டுக்கு கொண்டுவருவது என பார்க்கலாம்.

செயலற்ற வங்கி கணக்கை மீண்டும் செயல்படுத்துவது எப்படி?.. கட்டணம் செலுத்த வேண்டுமா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 14 Oct 2026 19:19 PM IST

தற்போது இந்தியா முழுவதும் ஆன்லைன் பண பரிவர்த்தனை (Online Money Transaction) தான் அதிகமாக நடைபெறுகிறது. எனவே, ஒருவர் பணத்தை அனுப்ப வேண்டும் என்றாலும் அல்லது பணத்தை பெற வேண்டும் என்றாலும் வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், பலரும் தங்களுக்கு தேவையான அளவு ஒன்றோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளையோ வைத்துள்ளனர். இவ்வாறு ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்திருக்கும் நபர்கள் அதனை பயன்படுத்த மறக்கும் பட்சத்தில் அந்த கணக்கு செயலற்றதாக மாறிவிடும். இந்த நிலையில், அத்தகைய செயலற்ற வங்கி கணக்குகளை கட்டணம் செலுத்தாமல் மீண்டும் பயன்படுத்த தொடங்குவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வங்கி கணக்கு செயல்படாமலே இருந்தால் என்ன ஆகும்?

ஒரு வங்கி கணக்கில் வாடிக்கையாளரின் Initiated Transaction இல்லை என்றால் அந்த வங்கி கணக்கு செயலற்ற வங்கி கணக்கு என கருதப்படும். இந்த கணக்கில் பணம் இருக்கும். இதுவே ஒரு வாடிக்கையாளர் தனது வங்கி கணக்கில் இரண்டு ஆண்டுகள் Initiated Transaction செய்யாமல் இருந்தால் அது முடக்கப்பட்ட வங்கி கணக்காக (Dormant Account) மாறிவிடும். இந்த கணக்கிலும் பணம் இருக்கும். ஆனால், அதனை எடுக்க முடியாது.

இதையும் படிங்க : ஒரு லிட்டருக்கு 69.3 கி.மீ. மைலேஜ்.. டிவிஎஸ் ரிலீஸ் செய்யும் ரேடியான் பைக். சிறப்பம்சங்கள் என்னென்ன?

செயலற்ற வங்கி கணக்கை மீண்டும் செயலாக்குவது எப்படி?

ஒரு செயலற்ற வங்கி கணக்கை மீண்டும் செயலாக்குவது சுலபமானது. அதாவது, அந்த செயலற்ற வங்கி கணக்குக்கு பணம் போடுவது அல்லது அந்த கணக்கில் இருந்து ஏடிஎம் மையம் மூலம் பணம் எடுப்பது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் அந்த வங்கி கணக்கு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.

இதையும் படிங்க : திருபாய் அம்பானி முதல் முகேஷ் அம்பானி வரை… இந்தியாவின் வளர்ச்சியில் அழியாத முத்திரையைப் பதித்த ரிலையன்ஸ்

ஒருவேளை உங்களது வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்றால் அதனை கேஒய்சி செய்து மறுபடியும் புதுப்பித்துக்கொள்ளலாம். அதனை வங்கி செயலிகள் மூலமாகவோ அல்லது நேரடியாக வங்கிக்கு சென்றோ மிக சுலபமாக செய்து முடித்துவிடலாம்.

Follow Us