தீபாவளிக்கு பிறகு அமலுக்கு வரும் எம்டிஆர் கட்டணம்.. NPCI முக்கிய அறிவிப்பு!
UPI MDR Charges Delayed | யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான எம்டிஆர் கட்டணம் அக்டோபர் 15, 2026 முதல் அமலுக்கு வரும் என கூறப்பட்டு இருந்த நிலையில், தற்போது அது தீபாவளிக்கு பிறகு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் கூறியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக மிகவும் பேசுபொருளாக இருந்ததுதான் எம்டிஆர் (MDR – Merchant Discount Rate) கட்டணம். இந்த கட்டணம், நாளை (அக்டோபர் 15, 2026) முதல் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு (UPI – Unified Payment Interface) அமலுக்கு வரும் என கூறப்பட்டு இருந்த நிலையில், தற்போது அது அமலுக்கு வருவது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதாவது, தீபாவளி பண்டிகைக்கு பிறகு எம்டிஆர் கட்டணத்தை அமல் செய்ய திட்டமிட்டுள்ளதாக என்பிசிஐ (NPCI – National Payment Corporation of India) கூறியுள்ளது.
எம்டிஆர் கட்டண முறை என்றால் என்ன?
இந்தியாவை பொருத்தவரை பெரும்பாலான மக்கள் யுபிஐ பண பரிவர்த்தனையை தாய் பயன்படுத்துகின்றனர். கையில் பணத்தை வைத்து செலவு செய்யும் பழக்கம் பொதுமக்கள் மத்தியில் பெருமளவு குறைந்துவிட்டது. இந்த நிலையில் தான், மத்திய அரசு எம்டிஆர் கட்டணத்தை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளது.
இதையும் படிங்க : UPI பரிவர்த்தனைகளுக்கு MDR கட்டணம் அமல்படுத்துவது ஒத்திவைப்பு! தீபாவளிக்குப் பிறகு புதிய நடைமுறை அமல் – NPCI அறிவிப்பு




அதாவது பெரிய வணிக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறும் ரூ.2,000-க்கு மேலான யுபிஐ பண பரிவத்தனைகளுக்கு 0.4 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதுதான் அது. இந்த கட்டணத்தை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய தேவை இல்லை. இது முற்றிலும் வணிக நிறுவனங்களுக்கானது என்பதால் இதில் வாடிக்கையாளர்களுக்கு சிக்கல் இல்லை.
தீபாவளிக்கு பிறகு தள்ளிப்போகும் எம்டிஆர்?
எம்டிஆர் கட்டணம் அக்டோபர் 15, 2026 முதல் அமலுக்கு வர உள்ளதாக கூறப்பட்டு இருந்த நிலையில், முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, எம்டிஆர் கட்டணத்தை தீபாவளிக்கு பிறகு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக என்பிசிஐ கூறியுள்ளது. தீபாவளியின் போது பண்டிகை கால விற்பனை சூடு பிடிக்கும் நிலையில், எம்டிஆர் கட்டணம் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : செப்டம்பரில் அதிரடியாக உயர்ந்த சில்லறை பணவீக்கம்.. அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயருமா?
எம்டிஆர் கட்டணம் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த தகவலை என்பிசிஐ இதுவரை வெளியிடவில்லை. இந்த நிலையில், விரைவில் அது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.