AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரெப்போ வட்டி விகித உயர்வு எதிரொலி.. கடன்களுக்கான வட்டியை உயர்த்திய வங்கிகள்!

Banks Increase Loan Interest Rates | இந்திய ரிசர்வ் வங்கி தனது ரெப்போ வட்டி விகிதத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதன் விளைவாக இந்தியன் வங்கி உள்ளிட்ட சில முக்கிய வங்கிகளும் தங்களது வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரெப்போ வட்டி விகித உயர்வு எதிரொலி.. கடன்களுக்கான வட்டியை உயர்த்திய வங்கிகள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 14 Oct 2026 15:52 PM IST

இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank Of India) கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ரெப்போ வட்டி (Repo Rate) விகிதத்தை உயர்த்தியது. டெல்லியில் நடைபெற்ற மூன்று நாட்கள் நாணய நிதி கொள்கை குழு கூட்டத்திற்கு பிறகு, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்துவதாக அறிவித்தார். அதாவது, 4 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதன் விளைவாக சில வங்கிகளும் தங்களது வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்த நிலையில், எந்த எந்த வங்கிகள் தங்களது வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

4 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய ஆர்பிஐ

இந்திய ரிசர்வ் வங்கி தனது ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக ரெப்போ வட்டி 5.25 சதவீதத்தில் இருந்து 5.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதன் விளைவாக சில வங்கிகள் தங்களது வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன. அதாவது, பஞ்சாப் நேஷனல் பேங்க், இந்தியன் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய வங்கிகள் தங்களது கடன் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அதிரடியாக உயர்த்தியுள்ளன.

இதையும் படிங்க : 8வது ஊதியக்குழு.. சம்பளத்தை ரூ.18,000-ல் இருந்து ரூ.69,000 ஆக உயர்த்த கோரிக்கை!

வட்டி விகிதத்தை உயர்த்திய பிஎன்பி வங்கி

பிஎன்பி வங்கி (PNB Bank) தனது ரெப்போ உடன் இணைக்கப்பட்ட வட்டி விகிதத்தை 8.10 சதவீதம் முதல் 8.35 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இது அக்டோபர் 08, 2026 முதல் அமலுக்கு வந்துள்ளது.

வட்டி விகிதத்தை உயர்த்திய பேங்க் ஆஃப் இந்தியா

பேங்க் ஆஃப் இந்தியா (Bank Of India) தனது ரெப்போ உடன் இணைக்கப்பட்ட வட்டி விகிதத்தை 8.10 சதவீதம் முதல் 8.35 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இது அக்டோபர் 07, 2026 முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதையும் படிங்க : UPI பரிவர்த்தனைகளுக்கு MDR கட்டணம் அமல்படுத்துவது ஒத்திவைப்பு! தீபாவளிக்குப் பிறகு புதிய நடைமுறை அமல் – NPCI அறிவிப்பு

வட்டி விகிதத்தை உயர்த்திய பேங்க் ஆஃப் பரோடா

பேங்க் ஆஃப் பரோடா (Bank Of Baroda) தனது ரெப்போ உடன் இணைக்கப்பட்ட வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ள நிலையில், அதன் வட்டி விகிதம் தற்போது 8.15 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது அக்டோபர் 08, 2026 முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB – Indian Overseas Bank) தனது ரெப்போ உடன் இணைக்கப்பட்ட வட்டி விகிதத்தை 8.10 சதவீதம் முதல் 8.35 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இது அக்டோபர் 08, 2026 முதல் அமலுக்கு வந்துள்ளது.

Follow Us