AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Gold Price : இன்னும் 2 ஆண்டுகளில் தங்கம் விலை எப்படி இருக்கும்.. பொருளாதாக வல்லுநர்கள் கூறுவதை கேளுங்கள்!

Why Experts Say Gold Will Soar in Next 2 Years | தங்கம் விலை நாளுக்கு நாள் கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் தான், இன்னும் ஒரண்டு ஆண்டுகளில் தங்கம் விலை மிக கடுமையான மாற்றங்களை சந்திக்க உள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 16 Oct 2026 12:51 PM IST
தங்கம், கடந்த ஆண்டுகளில் தொடர் உயர்வை சந்தித்து தற்போது கடும் உச்சத்தில் உள்ளது. இந்த நிலையில், தற்போது தங்கம் வாங்கலாமா, அல்லது இன்னும் சில நாட்கள் தங்கள் காத்திருந்து தங்கம் வாங்கலாமா என பலரும் குழப்பத்தில் உள்ளனர். இந்த நிலையில் தான், இன்னும் இரண்டு ஆண்டுகளில் தங்கம் பல முக்கிய மாற்றங்களை எதிர்க்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 / 5
கடந்த 10 நாட்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில், தங்கம் தற்போது சரிவில் உள்ளது. இந்த நிலையில் தான், தங்கம் சரிவில் உள்ளதை வாய்ப்பாக பயன்படுத்தி பொதுமக்கள் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர். காரணம், அடுத்த இரண்டு ஆண்டுகளில் தங்கம் மீண்டும் புதிய உச்சத்தை தொடும் என்பதுதான்.

2 / 5
அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் தான், உலக நாடுகள் அதிக அளவில் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். இதன் காரணமாக தங்கத்திற்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதன் காரணமாக அதன் விலையும் உயரும் என கூறப்படுகிறது.

3 / 5
சமீபத்தில் ஃபைனான்சியல் டைம்ஸ் நடத்திய மாநாட்டில் பங்கேற்று பேசிய Troy Asset Management நிறுவன தலைவர் சார்லட் யேஞ்ச், அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள்ளாக தங்கம் விலை புதிய சாதனை விலையை தொடும் என கூறியுள்ளார். அமெரிக்காவின் கடன் சுமையை சுட்டிக்காட்டியுள்ள அவர், அதில் இருந்து விடுபட தங்கம் ஒரு சிறந்த அரணாக செயல்படுவதாக கூறியுள்ளார்.

4 / 5
வருங்காலத்தில் ஏற்படும் பொருளாதார மந்தநிலைகளின்போது மத்திய வங்கிகள் பண விநியோகத்தை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதன் காரணமாக, காகித நாணயங்கள் மீதான நம்பிக்கை குறைய வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார். எனவே, மீண்டும் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். 

5 / 5
Follow Us