பெட்ரோல் ஏற்றுமதி வரியை உயர்த்திய மத்திய அரசு.. டீசல் வரியை குறைத்தது.. முக்கிய விவரம்!
Central Govt Raises Petrol, Diesel Export Duty | ஈரான் மற்றும் உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட சிக்கல்களை உலக நாடுகள் எதிர்க்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் தான், இந்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதி வரியில் அதிரடி மாற்றம் செய்துள்ளது.
பெட்ரோல் ஏற்றுமதி மீதான வரியை (Petrol Export Duty) மத்திய அரசு (Central Government Of India) அதிரடியாக உயர்த்தியுள்ளது. ஈரான் போர் காரணமாக சரவதேச அளவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் தொடர்பான சிக்கல்கள் நீடித்து வரும் நிலையில், இந்த முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெட்ரோல் ஏற்றுமதி வரி உயர்த்தப்பட்டுள்ள நிலையில், டீசல் ஏற்றுமதி வரி (Diesel Export Duty) குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அரசு செய்துள்ள இந்த முக்கிய மாற்றங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பெட்ரோல், டீசல் ஏற்றுமதி வரிகளில் முக்கிய மாற்றங்கள்
பெட்ரோல் ஏற்றுமதி வரியை லிட்டருக்கு ரூ.0.500ல் இருந்து ரூ.2.50 ஆக உயர்த்தியும், டீசல் மீதான வரியை ரூ.16-ல் இருந்து ரூ.8.50 ஆக குறைத்தும் மத்திய நிதி அமைச்சகம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த மாற்றங்கள் இன்று (அக்டோபர் 16, 2026) முதல் அமலுக்கு வந்துள்ளன. ஈரான் மற்றும் உக்ரைன் போர்களின் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் விலைகளில் கடுமையான மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதற்கு ஏற்ப மத்திய அரசு ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை ஏற்றுமதி வரிகளை மறு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க : Jio IPO: நாட்டின் டேட்டா பயன்பாட்டில் 60% பங்களிக்கும் ஜியோ – எதிர்கால வியூகங்களை வெளிப்படுத்திய ஆகாஷ் அம்பானி




பலமுறை மாற்றம் செய்யப்பட்ட வரிகள்
சமீப காலமாக சர்வதே எண்ணெய் விலைகளில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்கள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் ஆகியவற்றின் காரணமாக இந்த வரிகளில் தொடர் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக 2026 செப்டம்பர் மாதம் பெட்ரோல் ஏற்றுமதி வரியை மத்திய நிதி அமைச்சகம் 0.50 ஆக குறைந்தது. ஆனால், தற்போது ரூ.2.50 ஆக வரியை உயர்த்தியுள்ளது.
இதையும் படிங்க : Jio IPO: ரூ.30,213 கோடி மதிப்பிலான ஐபிஓ: விலை, தேதிகள் மற்றும் முழு விவரங்கள்
தொடர்ந்து 3 முறை குறைக்கப்பட்ட டீசல் வரி
2026, ஆகஸ்ட் மாதம் டீசல் ஏற்றுமதி வரியை மத்திய அரசு லிட்டருக்கு ரூ.25.50 உயர்த்தி உத்தரவிட்டது. பின்னர் செப்டம்பர் மாத மறு ஆய்வில் அதனை ரூ.19 ஆக குறைத்தது. அதனை தொடர்ந்து அது ரூ.16 ஆக குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் வரி குறைக்கப்பட்டு டீசல ஏற்றுமதி வரி ரூ.8.50 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.