Tamil Nadu Weather now: நாளை 27 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் தகவல்
Tamil Nadu weather today : வடகிழக்கு பருவமழை (Northeast Monsoon) அக்டோபர் 15, 2026 அன்று தொடங்கியுள்ள நிலையில் அக்டோபர் 16, 2026 இன்றும் அக்டோபர் 17, 2026 நாளையும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிக கனமழை முதல் கனமழை பெய்யக் கூடும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அக்டோபர் 16 : வடகிழக்கு பருவமழை (Northeast Monsoon) அக்டோபர் 15, 2026 இன்று தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால், கடலோர ஆந்திரப் பிரதேசம், ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளம், மாஹே ஆகிய பகுதிகளில் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அக்டோபர் 16, 2026 இன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிக கனமழை முதல் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை 27 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அக்டோபர் 16, 2026 நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் மதுரை
மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், அதனைத் தொடர்ந்து ஈரோடு, திருப்பூர், விருதுநகர், கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, கரூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, கடலூர், திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க : கவர்ச்சி அரசியல் நீர்க்குமிழி போன்றது; எப்போது வேண்டுமானாலும் உடைந்து சிதறும்! – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..




அதனைத் தொடர்ந்து அக்டோபர் 17, 2026 நாளை நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கூடிய கன மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் அக்டோபர் 21, 2026 வரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அந்த வகையில் அக்டோபர் 18, 2026 ஞாயிற்றுக்கிழமை நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும், அக்டோபர் 19, 2026 திங்கள் கிழமை நீலகிரி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அக்டோபர் 20, 2026 அன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய மாவட்டங்களிலும் அக்டோபர் 21, 2026 நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களிலும் கனமழை பெய்யக் கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : “நிர்வாக முடிவுகளை எடுப்பதில் தவெக அரசுக்கு தடுமாற்றம் ஏன்?”.. அன்புமணி ராமதாஸ் சரமாரி கேள்வி!!
சென்னையை பொறுத்தவரை அக்டோபர் 15, 2026 இன்றும், அக்டோபர் 16, 2026 நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.