Gold Price: தொடர் சரிவுக்குப் பிறகு ஸ்திரமான தங்கம் விலை.. வெள்ளியும் அதே நிலையில் நீடிப்பு!
Chennai Gold Rate: சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 13,515-க்கும், ஒரு சவரன் (8 கிராம்) 1,08,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கத்தைப் பொறுத்தவரையில், ஒரு கிராம் 14,744-க்கும், ஒரு சவரன் 1,17,952-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அக்டோபர் 16, 2026: தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்த நிலையில், இன்று (அக்டோபர் 16) எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலையும் மாற்றமின்றித் தொடர்ந்து விற்பனையாகிறது. 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து, அந்த ஆண்டின் இறுதியில் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயைக் கடந்தது. 2026ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் விலை உயர்வு நீடித்த நிலையில், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 17,000-ஐக் கடந்தது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாகத் தங்கம் விலை கடுமையான ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. சில நாட்களில் அதிரடியாக உயர்வதும், தொடர்ந்து வரும் நாட்களில் சரிவைச் சந்திப்பதும் முதலீட்டாளர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தங்கம், வெள்ளி விலை
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 13,515-க்கும், ஒரு சவரன் (8 கிராம்) 1,08,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கத்தைப் பொறுத்தவரையில், ஒரு கிராம் 14,744-க்கும், ஒரு சவரன் 1,17,952-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையிலும் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 240-க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,40,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க: ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ தேதிகள் அறிவிப்பு – முக்கியத் தகவல்களைப் பகிர்ந்த இஷா அம்பானி
தங்கம் விலை மீண்டும் உயருமா?
சர்வதேசச் சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு, வட்டி விகிதங்கள், மத்திய வங்கிகளின் தங்கக் கொள்முதல் மற்றும் இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு உள்ளிட்ட காரணிகள் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும், பணவீக்கம், பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் பதற்றங்கள் அதிகரிக்கும்போது, பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தின் மீதான ஆர்வம் உயர வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க: 20 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.17,356 – இஎம்ஐ, எஸ்ஐபி, ஆர்டி – எதில் அதிக லாபம்?
இருப்பினும், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. எனவே, முதலீடு செய்ய விரும்புவோர் தங்களின் நிதிநிலை மற்றும் முதலீட்டு இலக்குகளைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். ஒரே நேரத்தில் முழுத் தொகையையும் முதலீடு செய்வதற்குப் பதிலாக, படிப்படியாக முதலீடு செய்வதையும் பரிசீலிக்கலாம்.
2026ஆம் ஆண்டு இறுதிக்குள் தங்கம் விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளதாகச் சில சந்தை நிபுணர்கள் கருதினாலும், விலை மாற்றங்கள் சர்வதேசச் சந்தை நிலவரங்களைப் பொறுத்தே அமையும்.