ரூ.10 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தால் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்புமா?.. வருமான வரித்துறைகள் விதிகள் கூறுவது என்ன?
Income Tax Notice for 10 Lakh Rupees Bank Deposit | ஒருவர் தனது தனிப்பட்ட நிதி நடவடிக்கைகளை முறையாக வைத்திருக்கவில்லை என்றால் வருமான வரித்துறை அது குறித்து நடவடிக்கை எடுக்கும். இந்த நிலையில், வங்கி கணக்கில் ரூ.10 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தால் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்புமா என்பது குறித்து பார்க்கலாம்.
இந்தியாவில் உள்ள பொதுமக்கள் சட்டவிரோதமாக பணபரிவர்த்தனை மேற்கொள்கின்றனரா என்பதை கண்காணிப்பதற்காக, இந்திய வருமான வரித்துறை (Income Tax Department Of India) தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஒவ்வொருவரின் தனிப்பட்ட பண பரிவத்தனைகளையும் வருமான வரித்துறை கண்காணித்து வருகிறது. இந்த நிலையில், ஒருவர் தனது வங்கி கணக்கில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்தார் என்றால் அவருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்புமா, அது குறித்து வருமான வரித்துறையின் புதிய விதிகள் கூறுவது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
எந்த எந்த பரிவர்த்தனைகள் வருமான வரித்துறையின் கவனத்திற்குச் செல்லும்?
வங்கி கணக்கில் டெபாசிட் செய்யும் பணம், வங்கி கணக்கில் இருந்து மேற்கொள்ளும் பண பரிவர்த்தனைகள் அனைத்தும் வருமான வரித்துறையின் கண்காணிப்பு வளையத்திற்குள் வரும். வருமான வரிச் சட்டத்தின் கீழ், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் பெரிய அளவிலான பண பரிவர்த்தனை விவரங்களை வருமான வரித்துறைக்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.
இதையும் படிங்க : மஹிந்திராவின் CNG கார்.. XUV 3XO CNG விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்னென்ன?




சேமிப்பு கணக்கு
ஒரு நிதியாண்டில் ஒருவர் தனது சேமிப்பு கணக்குகளில் (Savings Account) சுமார் ரூ.10 லட்சத்துக்கும் மேல் பணத்தை வைத்தால் அது குறித்து வங்கி வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கும்.
நடப்பு கணக்கு
தொழில் அல்லது வியாபார நிமித்தமாக தொடங்கப்படும் நடப்பு கணக்கில் (Current Account) ஒரு நிதியாண்டில் ஒருவர் ரூ.50 லட்சம் அல்லது அதற்கும் மேல் டெபாசிட் செய்தால் அது குறித்து வங்கி வருமான வரித்துறைக்கு அந்த தகவலை தெரிவிக்கும்.
இதையும் படிங்க : Gold Price: தொடர் சரிவுக்குப் பிறகு ஸ்திரமான தங்கம் விலை.. வெள்ளியும் அதே நிலையில் நீடிப்பு!
நிலையான வைப்பு நிதி
ஒருவர், ஒரு நிதியாண்டில் சுமார் ரூ.10 லட்சத்துக்கும் மேல் முதலீடு செய்தால், அது குறித்து அந்த வங்கி வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கும்.
மேலே குறிப்பிட்டுள்ள அளவுகோல்களை தாண்டினாலே வருமான வரித்துறை இந்த நடவடிக்கையை எடுக்கும் என்று அர்த்தம் இல்லை. வங்கி வழங்கும் தகவலின் அடிப்படையில் வருமானத்துறை உங்கள் வங்கி கணக்கை சோதனை செய்யும். அப்போது அந்த வருமானத்திற்கான உரிய ஆதாரம் உங்களிடம் இல்லை என்றால் வருமான வரித்துறை அது குறித்து நடவடிக்கை எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.