AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வீடு Vs வணிக இடம்.. இந்த ஆண்டு பண்டிகைக்கு எதில் முதலீடு செய்யலாம்?

Festival Season Property Investment | பண்டிகை காலத்தின்போது தங்கம், நிலம் ஆகியவற்றில் முதலீடு செய்வது இந்தியர்களின் வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், இந்த ஆண்டு வீடு அல்லது வணிக இடம் இவை இரண்டில் எதில் முதலீடு செய்வது சிறந்தது என பார்க்கலாம்.

வீடு Vs வணிக இடம்.. இந்த ஆண்டு பண்டிகைக்கு எதில் முதலீடு செய்யலாம்?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 17 Oct 2026 11:59 AM IST

தீபாவளி, பொங்கல் என்றால் தமிழர்களுக்கு மிகவும் கொண்டாட்டமாக இருக்கும். புத்தாடை வாங்குவது, இனிப்பு பலகாரங்களை வாங்குவது, வீட்டுக்கு தேவையான அலங்கார பொருட்களை வாங்குவது என அந்த மாதம் முழுவதையும் அவர்கள் ஷாப்பிங்கில் கழித்துவிடுவர். இந்த பொருட்கள் மட்டுமன்றி வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, வாகனங்கள் வாங்குவது ஆகியவற்றையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இதில் தங்க நகைகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.

இத்தகைய பண்டிகை நாட்களில் வீடு, நிலம் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்வதன் மூலம் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையில் அவர்கள் முதலீடு செய்கின்றனர். இந்த நிலையில், இந்த பண்டிகை காலத்தில் வீடு அல்லது வணிக இடம் இரண்டில் எது வாங்குவது சிறந்ததாக இருக்கும் என்பது குறித்து தெரிந்துக்கொண்டு அதற்கு ஏற்ப முதலீடு செய்வது சிறந்ததாக இருக்கும்.

இந்த ஆண்டு பண்டிகைக்கு எதில் முதலீடு செய்யலாம்?

வீடு அல்லது வணிக இடம் இரண்டு அதனை வாங்கும் நபர்களின் தேவையை பொருத்ததாக உள்ளது. வீட்டை காட்டிலும் வணிக இடத்திற்கு அதிக லாபம் மற்றும் வருமானம் கிடைக்கும். ஆனால், வணிக இடத்தை வாங்க சற்று கூடுதல் பணம் செலுத்த வேண்டிய நிலை இருக்கும். எனவே முதலீடு செய்யும் நபர்கள் அவற்றை தெரிந்துக்கொண்டு அதற்கு ஏற்ப முதலீடு செய்வது உதவியாக இருக்கும்.

இதையும் படிங்க : பெட்ரோல் ஏற்றுமதி வரியை உயர்த்திய மத்திய அரசு.. டீசல் வரியை குறைத்தது.. முக்கிய விவரம்!

வணிக இடங்கள் அதிக வாடகை பெற உதவியாக இருக்கும்

வீடு உள்ளிட்ட இடங்கள் மற்றும் கட்டங்கள் சற்று குறைந்த அளவிலான வாடகையை தான் பெற உதவும். ஆனால், வணிக இடங்கள் அதிக வாடகை பெற்று தரும். வீட்டு உள்ளிட்ட இடங்கள் 2.5 சதவீதம் வாடகை பெற்று தரும் என்றால், அலுவலகம் உள்ளிட்ட வணிக இடங்கள் 7 முதல் 8 சதவீதம் வரை வாடகை பெற்று தரும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க : Gold Price : இன்னும் 2 ஆண்டுகளில் தங்கம் விலை எப்படி இருக்கும்.. பொருளாதாக வல்லுநர்கள் கூறுவதை கேளுங்கள்!

ஆனால், இவற்றில் முதலீடும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது வீடு உள்ளிட்ட முதலீடுகளுக்கு சற்று குறைந்த தொகையே போதுமானதாக இருக்கும். ஆனால், அலுவலகம் உள்ளிட்ட வணிக இடங்களை வாங்குவது, அதற்கான வரி மற்றும் பராமரிப்பு ஆகியவை சற்று அதிகமாகவே இருக்கும்.

Follow Us