ரெப்போ வட்டி உயர்வு எதிரொலி.. வட்டி விகிதத்தை உயர்த்திய ஆர்பிஐ!
State Bank Of India Hikes Repo Rate | இந்திய ரிசர்வ் வங்கி தனது ரெப்போ வட்டி விகிதத்தை அதிரடியாக உயர்த்தியது. அதன் விளைவாக தற்போது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்த நிலையில், அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank Of India) சமீபத்தில் தனது ரெப்போ வட்டி (Repo Rate) விகிதத்தை அதிரடியாக உயர்த்தியது. அதன் விளைவாக பல்வேறு வங்கிகள் தங்களின் கடன் விகிதங்களை உயர்த்தின. அந்த வகையில் தற்போது எஸ்பிஐ வங்கியும் தனது கடன் விகிதங்களை உயர்த்தியுள்ளது. இதனால், எஸ்பிஐ (SBI – State Bank Of India) வங்கியில் கடன் வாங்கியுள்ளவர்களுக்கு பெரும் சவால் உருவாகியுள்ளது. இந்த நிலையில், எஸ்பிஐ மேற்கொண்டுள்ள இந்த முக்கிய நடவடிக்கை குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரெப்போ வட்டி விகிதத்தை அதிரடியாக உயர்த்திய ஆர்பிஐ
இந்தியாவில் பணவீக்கம் நாளுக்கு நாள் கடும் உயர்வை சந்தித்து வருவதன் காரணமாக இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை அதிரடியாக உயர்த்தியது. இந்த மாத தொடக்கத்தில் நாணய கொள்கை குழு கூட்டத்தை நடத்திய ஆர்பிஐ, அதன் முடிவில் ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியது. இதன் காரணமாக, 5.25 ஆக ரெப்போ வட்டி விகிதம் 5.50 சதவீதமாக உயர்ந்தது.
இதையும் படிங்க : Gold Price: தொடர் சரிவுக்குப் பிறகு ஸ்திரமான தங்கம் விலை.. வெள்ளியும் அதே நிலையில் நீடிப்பு!




வட்டி விகிதத்தை உயர்த்திய எஸ்பிஐ
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதன் எதிரொலியாக ஸ்டேட் ஃபேங்க் ஆஃப் இந்தியாவும் தனது பெஞ்ச்மார்க் கடன் விகிதங்களில் 25 அடிப்படை புள்ளிகளை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்த மாற்றம் அக்டோபர் 15, 2026 முதலே அமலுக்கு வந்துள்ளதாகவும் எஸ்பிஐ கூறியுள்ளது. எனவே எஸ்பிஐ வங்கியில் ப்ளோடிங் ரேட் (Floating Rate) மூலம் கடன் வாங்கியுள்ளவர்களுக்கான வட்டி விகிதத்தில் 0.025 சதவீதம் உயரும் சூழல் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க : Jio IPO: ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ தேதிகள் அறிவிப்பு – முக்கியத் தகவல்களைப் பகிர்ந்த இஷா அம்பானி
இவ்வாறு எஸ்பிஐ வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதன் காரணமாக, அந்த வங்கியில் வீட்டு கடன் உள்ளிட்ட கடன்களை வாங்கியவர்கள் கூடுதல் மாத தவணை அல்லது கூடுதல் மாத தவணை தொகையை செலுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.