இந்திய பொருளாதாரம் தொடர்ந்து 5 ஆண்டுகளாக 7% வளர்ச்சி – தென்கொரிய பொருளாதார நிபுணர் பாராட்டு!
India GDP Growth Record : கொரோனா பெருந்தொற்று காலத்துக்கு பிறகு இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியைப் பதிவு செய்து வருவதாக தென்கொரிய பொருளாதார நிபுணர் கியுங்ஹூன் கிம் பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காலத்துக்கு பிறகு இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியைப் பதிவு செய்து வருவதாக தென்கொரிய பொருளாதார நிபுணர் கியுங்ஹூன் கிம் பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதாகவும், இது வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனை என்றும் அவர் கூறியுள்ளார்.
தென்கொரியாவின் சர்வதேச பொருளாதாரக் கொள்கை நிறுவனத்தில் தெற்காசியப் பிரிவின் தலைவராகப் பணியாற்றும் கியுங்ஹூன் கிம், அக்டோபர் 16ஆம் தேதி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்துப் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி
சர்வதேச நாணய நிதியம், ஆசிய வளர்ச்சி வங்கி , உலக வங்கி உள்ளிட்ட முக்கிய சர்வதேச அமைப்புகள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்புகளை அண்மையில் உயர்த்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நடப்பு ஆண்டிலும் அடுத்த ஆண்டிலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என இந்த அமைப்புகள் கணித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.