AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக் பாஸில் சர்ப்ரைஸாக என்ட்ரி கொடுத்த நடிகர் விமல்.. டிடிஃஎப் வாசனுக்கு கிடைத்த எவிக்ஷன் ஃப்ரீ பாஸ்!

Bigg Boss Tamil 10: தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது ஆரம்பமாகி சிறப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியானது 6வது வாரத்தில் இதில் உள்ள நிலையில், இன்று (17/10/2026) நடிகர் விமல் பிக் பாஸில் சிறப்பு விருந்தினராக நுழைந்து, டிடிஃஎப் வாசனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

பிக் பாஸில் சர்ப்ரைஸாக என்ட்ரி கொடுத்த நடிகர் விமல்.. டிடிஃஎப் வாசனுக்கு கிடைத்த எவிக்ஷன் ஃப்ரீ பாஸ்!
டிடிஎஃப் வாசன் மற்றும் விமல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 17 Oct 2026 19:57 PM IST

மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்கப்படும் விஜய் டிவி (Vijay Tv) ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக் பாஸ் (Bigg Boss). ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சியானது இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. அந்த வகையில் தற்போது பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது ஆரம்பமான நிலையில், கிட்டத்தட்ட 6 வாரங்களை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக தொகுத்துவரும் நிலையில், மக்கள் மத்தியில் சிறப்பாக வரவேற்கப்பட்டுவருகிறது. இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கி 6வது வாரத்தின் இறுதியில் உள்ள நிலையில், இந்த வாரத்தில் டைமண்ட் ஹெய்ஸ்ட் மற்றும் டான் 10 .0 போன்ற டாஸ்குகளுடன் சிறப்பாக நடைபெற்றுவந்தது.

அந்த விதத்தில் இந்த வாரத்தில் டைமண்ட் ஹெய்ஸ்ட் டாஸ்கில் டிடிஃஎப் வாசன் சிறப்பாக விளையாடியிருந்த நிலையில், வரை விஜய் சேதுபதி பாராட்டியிருந்தார். இந்நிலையில் இன்று (17/10/2026) வெளியான புரோமோ ஒன்றில், நடிகர் விமல் சிறப்பு விருந்தினராக நுழைந்து, டிடிஃஎப் வாசனுக்கு சர்ப்ரைஸான விஷயம் ஒன்றை கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: பிக் பாஸில் டைமண்ட் டாஸ்க்… டிடிஃஎப் வாசனை பாராட்டிய விஜய் சேதுபதி – வைரலாகும் ப்ரோமோ!

சிறப்பு விருந்தினராக நுழைந்து டிடிஃஎப் வாசனுக்கு சர்ப்ஸை கொடுத்த நடிகர் விமல்:

இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கி இன்றுடன் 41 நாட்களாகியுள்ளது. அந்த விதத்தில் இந்த நிகழ்ச்சி தற்போதுதான் தீவிரமடைந்து விறுவிறுப்பாக இருந்துவருகிறது. இந்த வாரத்தில் டைமண்ட் ஹெய்ஸ்ட் டாஸ்கில் டிடிஃஎப் வாசன் தனது விளையாட்டை சிறப்பாக விளையாடியிருந்த நிலையில், விஜய் சேதுபதி பாராட்டியிருந்தார்.

இதையும் படிங்க: திரைத்துறையில் நாயகனாக 36 ஆண்டுகளை நிறைவு செய்த விக்ரம்… கொண்டாடும் ரசிகர்கள்

இந்நிலையில் இன்று வெளியான 3வது ப்ரோமோவில், சிறப்பு விருந்தினராக நடிகர் விமல் பிக் பாஸ் நிகழ்ச்சில் வந்துள்ளார். வந்த விமல், டிடிஃஎப் வாசனுக்கு சர்ப்ரைஸான விஷயம் ஒன்றை கொடுத்துள்ளார். விமல் டிடிஃஎப் வாசனுக்கு எவிக்ஷன் ஃப்ரீ பாஸை கொடுத்துள்ளார். தற்போது இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 41வது நாளின் 3வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

கடந்த வாரத்தில் ஜேசனுக்கு எவிக்ஷன் ப்ரீ பாஸ் கிடைத்திருந்த நிலையில், தற்போது இந்த வாரத்தில் டிடிஃஎப் வாசனுக்கு எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் கிடைத்துள்ளது. மொத்தம் 3 எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஷமா, ஜேசன் மற்றும் டிடிஃஎப் வாசன் என மொத்தம் 3 போட்டியாளர்கள் இந்த எவிக்ஷன் ப்ரீ பாஸை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us