AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரேஷன கார்டு பயனர்களுக்கு வெளியான 2 முக்கிய அப்டேட்டுகள்.. முழு விவரம்!

Tamil Nadu Ration Shop Update | தமிழகத்தில் அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ள நிலையில், தொடர் விடுமுறை வர உள்ளது. இந்த நிலையில், ஆயுதபூஜையை தொடர்ந்து விஜய தசமி கொண்டாடப்பட உள்ள நிலையில், நாளை (அக்டோபர் 18, 2026) அன்று ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன கார்டு பயனர்களுக்கு வெளியான 2 முக்கிய அப்டேட்டுகள்.. முழு விவரம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 17 Oct 2026 12:50 PM IST

தமிழகத்தில் விழாக்காலம் தொடங்கியுள்ளது. ஆயுத பூஜை, தீபாவளி, பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைகள் வரிசைக் கட்டி நிற்கின்றன. இந்த நிலையில் தான், ஆயுதபூஜை விடுமுறை மற்றும் தீபாவளி பண்டிகை ஆகியவற்றை முன்னிட்டு ரேஷன் அட்டை (Ration Card) தாரர்களுக்கு முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. எனவே, ரேஷன் அட்டை பயனர்கள் இந்த அறிவிப்பு குறித்து தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரேஷன கார்டு பயனர்களுக்கு வெளியான 2 முக்கிய அப்டேட்டுகள்

பொதுவாக தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் மூன்றாவது மற்றும் ஞான்காவது ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறையாக இருக்கும். இந்த நிலையில், தமிழகத்தில் நாளை மறுநாள் (அக்டோபர் 19, 2026) ஆயுதபூஜையை தொடர்ந்து விஜய தசமி கொண்டாடப்பட உள்ளது. எனவே ஞாயிற்றுக்கிழமையை தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை வருவதன் காரணமாக பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான், பொதுமக்கள் எந்தவித தட்டுப்பாடும் இன்றி ரேஷன் பொருட்களை வாங்க தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ.5,000 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?.. முழு விவரம் இதோ!

தமிழகத்தில் நாளை ரேஷன் கடைகள் இயங்கும்

இதன் காரணமாக தமிழகத்தில் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் நாளை (அக்டோபர் 18, 2026) ரேஷன் கடைகள் இயங்கும். எனவே, நாளைய தினம் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகே உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். நாளை (அக்டோபர் 18, 2026) அன்று ரேஷன் கடைகள் இயங்குவதன் காரணமாக அதற்கு பதிலாக நவம்பர் 21, 2026 அன்று தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு விடுமுறையாக இருக்கும் என உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : பெட்ரோல் ஏற்றுமதி வரியை உயர்த்திய மத்திய அரசு.. டீசல் வரியை குறைத்தது.. முக்கிய விவரம்!

எனவே, தொடர் விடுமுறை கணக்கில் கொண்டு பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us