AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Varanasi: வாரணாசி படத்தின் ஷூட்டிங்கில் அது பெரிய சவாலாக இருந்தது – இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி பேச்சு!

SS Rajamouli on Varanasi Film Challenges: தென்னிந்திய மக்கள் மத்தியில் அதிகம் போற்றப்படும் இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இவரின் இயக்கத்தில் பான் இந்திய திரைப்படமாக உருவாக்கப்பட்டுவருவதுதான் வாரணாசி. இப்படத்தின் ஷூட்டிங்கின்போது இருந்த சவால்கள் குறித்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி விரிவாக பேசியுள்ளார்.

Varanasi: வாரணாசி படத்தின் ஷூட்டிங்கில் அது பெரிய சவாலாக இருந்தது – இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி பேச்சு!
வாரணாசி திரைப்பட சவால்கள் குறித்து எஸ்.எஸ். ராஜமௌலிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 20 Oct 2026 11:25 AM IST

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக மக்கள் மத்தியில் பேமசானவர் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி (S.S.Rajamouli). இவரின் இயக்கத்தில் இதுவரை பல்வேறு பிரமாண்டமான திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. பாகுபலி (Baahubali Movie) திரைப்படத்தின் மூலமாக இவருக்கு பான் இந்திய அளவுக்கு பிரபலம் கிடைத்த நிலையில், இந்த படமானது இந்திய சினிமாவிலே அதிகம் வசூல் பெற்ற படங்களில் ஒன்றாக இருந்துவருகிறது. இந்த படத்திற்கு பின் இறுதியாக இவர் ஆர்.ஆர்.ஆர் (RRR) என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். ராம் சரண் (Ram Charan) மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து இந்த படத்தில் நடித்த நிலையில், சிறப்பான ஹிட்டடித்தது. இந்த படத்திற்கு பின் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் (Mahesh Babu) நடிப்பில் இவர் இயக்கிவரும் பிரம்மாண்ட திரைப்படம்தான் வாரணாசி (Varanasi).

அறிவியல் மற்றும் டைம் டிராவல் தொடர்பான கதைக்களத்தில் இந்த படமானது உருவாக்கப்பட்டுவருகிறது. அந்த விதத்தில் இப்படத்தின் ஷூட்டிங்கின்போது இருந்த சவால்கள் என்னென்ன என்பது குறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் எஸ்.எஸ்.ராஜமௌலி பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: அஜித் குமாரின் டேர் டெவில் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்? அப்டேட் இதோ

வாரணாசி திரைப்படத்தின் ஷூட்டிங்கின்போது இருந்த சவால்கள் குறித்து எஸ்.எஸ்.ராஜமௌலி:

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்த இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, அதில் “அண்டார்டிகா, ஆப்பிரிக்கா, வாரணாசி, டைம் டிராவல் காட்சிகள், உகராவதி குகைகள் அல்லது உச்சக்கட்டக் காட்சி என ஒவ்வொரு காட்சிக்கும் அதற்கே உரிய தனித்துவமான உலகமும் சவால்களும் உண்டு. ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான உணர்வைக் கொண்டுள்ளது மற்றும் அதற்கு ஒரு வித்தியாசமான அணுகுமுறை தேவைப்படுகிறது. ஒவ்வொரு காட்சிக்கும் நாங்கள் விரிவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளைச் செய்ய வேண்டும்.

இதையும் படிங்க: சர்வைவல் டாஸ்க் டே 1… ரெட் டீம் மற்றும் ப்ளூ டீம் இடையே பிரிவினை!

அதை எப்படி காட்சிப்படுத்துவது மற்றும் அந்தப் பார்வையைத் திரையில் உயிர்ப்பிப்பது எப்படி என்பதைக் கண்டறிய வேண்டும். படக்குழுவிற்கு உள்ள மிகப்பெரிய சவால் என்னவென்றால், ஒவ்வொரு அம்சமும் மற்றவற்றுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் முற்றிலும் வித்தியாசமாக இருப்பதுதான். ஒவ்வொரு உலகத்தையும் உண்மையாக உருவாக்கி, அதைத் திரையில் ஒரு ஈர்க்கக்கூடிய காட்சி அனுபவமாக மாற்றுவது என்பதே ஒரு பெரிய சவால்” என அதில் அவர் கூறியிருந்தார்.

வாரணாசி படத்தின் ஷூட்டிங் சவால் குறித்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி பேசியது தொடர்பான எக்ஸ் பதிவு:

இந்த வாரணாசி திரைப்படமானது மிகவும் பிரம்மாண்டமான கதைக்களத்தில் அமைந்துள்ளது. இதில் மகேஷ் பாபு, பிருத்விராஜ் சுகுமார் மற்றும் நடிகை ப்ரியங்கா சோப்ரா உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது பான் இந்திய மொழிகளில் உருவாகும் நிலையில், 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆனால் இப்படத்தின் ரிலீஸின் மாதரம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக வட்டாரங்ககள் தெரிவிக்கிறது.

Follow Us