AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நீண்ட கால சிறை கைதிகளை விடுவிக்க வேண்டும்.. சட்டத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்த சண்முகம்.. பின்னணி என்ன!

CPM Shanmugam : தமிழக சிறைகளில் நீண்ட காலமாக அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்கள் உள்ளிட்ட அனைத்து கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் மனு அளித்துள்ளார் .

நீண்ட கால சிறை கைதிகளை விடுவிக்க வேண்டும்.. சட்டத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்த சண்முகம்.. பின்னணி என்ன!
பெ.சண்முகம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 22 Oct 2026 19:37 PM IST

தமிழக சிறைகளில் நீண்ட காலமாக அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமியர் உள்ளிட்ட அனைத்து கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரிடம் சிபிஎம் மாநில செயலர் சண்முகம் மனு அளித்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நீண்ட காலம் சிறையில் இருப்பவர்கள். அதிலும் குறிப்பாக இஸ்லாமிய சிறைவாசிகள் 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளனர். அவர்கள் சட்டப்படியான நிரந்தர விடுதலைக்கு போராடி வருகின்றனர். இது தொடர்பாக கோரிக்கை மக்கள் தாக்கல் செய்யப்பட்டும் அரசு நடவடிக்கை எடுக்காததன் காரணமாக, நீதி பேராணைகள் தாக்கல் செய்யப்பட்டு சென்னை உயர்நீதிமன்றம் அவ்வப்போது இடைக்கால விடுமுறை அளித்து வந்தது. இந்த நிலையில், அரசு நிரந்தர விடுதலைக்கான மனுக்களில் உத்தரவிட வேண்டும் என்றும், இடைக்கால விடுப்பை அரசே வழங்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

நீண்ட கால சிறைவாசிகளுக்கு நீண்ட விடுமுறை

நீண்ட கால சிறைவாசிகள் குறித்த முன் விடுதலை, பரோல் என்ற தற்காலிக விடுப்பு அதற்கான விதிகள் ஆகியவற்றை ஆராய்ந்து இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு மட்டுமின்றி, நீண்ட கால சிறைவாசிகளுக்கும் நீண்ட விடுமுறை கிடைக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, நீண்டகால சிறைவாசிகள் சிறை சூப்பிரண்டிடம் விண்ணப்பித்து அவர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையம், மாவட்ட ஆட்சியரிடம் நடத்தை குறித்து அறிக்கை பெற்று அதன் பின்னர் சிறைத்துறை டிஐஜிக்கு பரிந்துரை செய்து அவர் 60 நாட்களுக்கு ஃபர்லோ என்ற விடுமுறை வழங்குவார்.

மேலும் படிக்க: 2027 ஆம் ஆண்டு 24 நாட்கள் விடுமுறை… – வெளியானது அரசு பொது விடுமுறைப் பட்டியல்

60 நாள்கள் விடுமுறை பெறுவதில் உள்ள நடைமுறை

அதன் பிறகு சிறைவாசி 60 நாட்களுக்கு விண்ணப்பிக்க சிறை கண்காணிப்பாளர், நன்னடத்தை பற்றிய அறிக்கைகள் பெற்று, சிறைத்துறை தலைமை அதிகாரி மூலம் அரசு உள்துறை, சிறைச்சாலை துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்வார்கள். அதன்படி, சிறைவாசிகளுக்கு 60 நாட்கள் ஃபர்லோ என்ற விடுமுறையை அரசு வழங்க வேண்டும். அதன் அடிப்படையில், கடந்த ஆட்சியில் கோயம்புத்தூர், பாளையங்கோட்டை, புழல் மத்திய சிறைகளில் 28 ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ள 15 இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு கடந்த பிப்ரவரி 26 முதல் மார்ச் 13- ஆம் தேதி வரை 60 நாட்கள் ஃபர்லொ என்ற விடுப்பு வழங்கப்பட்டது.

நீண்ட கால சிறைவாசத்தை கவனத்தில் கொண்டு நடவடிக்கை

இந்த விடுமுறை முடிந்து அனைவரும் சிறைக்கு சென்று விட்டனர். தற்போது, மேலே கூறிய அரசாணை பிரிவு 6 (2) இன் கீழ் மேலும் 60 நாட்கள் ஃபர்லொ வழங்க கடந்த ஏப்ரல், மே மாதங்களில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வரை விடுப்பு வழங்கப்படவில்லை. எனவே, நீண்ட காலம் சிறையில் வாடும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு உடனடியாக ஃபர்லொ விடுப்பு வழங்கவும், நீண்டகால சிறைவாசம் என்பதை கவனத்தில் கொண்டு விடுவிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கோழியை விழுங்கிய 12 அடி மலைப்பாம்பு.. போராடிப் பிடித்த வனத்துறையினர்!

Follow Us