AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

புதியதாக வேலைக்கு செல்லும் நபர்களுக்கு ரூ.15,000.. அரசின் இந்த அட்டகாசமான திட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா?

PM Viksit Bharat Yojana | ஏற்கனவே ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் மூலம் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகளை அரசு வழங்கி வரும் நிலையில், அதன் கீழ் தற்போது இளைஞர்களுக்கான ஒரு புதிய திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது.

புதியதாக வேலைக்கு செல்லும் நபர்களுக்கு ரூ.15,000.. அரசின் இந்த அட்டகாசமான திட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 20 Oct 2026 13:25 PM IST

இளைய தலைமுறையினர் வேலைக்கு செல்வதை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு (Central Government Of India) ஒரு அசத்தலான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதாவது, இந்த திட்டத்தில் வேலைக்கு செல்லும் இளைஞர்களுக்கு ரூ.15,000 பரிசு கிடைக்கும். இந்த நிலையில், அது என்ன திட்டம், ஏன் வேலைக்கு செல்லும் இளைஞர்களுக்கு ரூ.15,000 வழங்கப்படுகிறது, இந்த திட்டத்தில் பயன்பெற யார் யார் தகுதியானவர்கள் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்டம்

இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் மூலம் பல்வேறு சிறப்பு அம்சங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் தான், புதியதாக வேலைக்கு செல்லும் இளைஞர்களுக்கு பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில், முதல் முறையாக முறைசார் வேலைவாய்ப்புக்குள் நுழையும் ஊழியர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

இதையும் படிங்க : புதுப்புது டெக்னாலஜிஸ்.. ஹீரோ களமிறக்கிய சூப்பர் பைக்.. என்னென்ன அம்சங்கள் தெரியுமா?

நிபந்தனைகள் மற்றும் தகுதிகள் என்ன என்ன?

புதியதாக வேலைக்கு சேரும் அனைவராலும் இந்த சலுகையை பெற முடியாது. மாறாக இந்த திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்றால் சில நிபந்தனைகள் மற்றும் தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது அவசியமாக உள்ளது. இந்த திட்டத்தில் ஆகஸ்ட் 01, 2025 முதல் ஜூலை 31, 2027 வரையிலான காலக்கட்டத்தில் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள் மட்டுமே தகுதியான கருதப்படும்.

இதையும் படிங்க : Gold Price : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.. ஒரு கிராம் எவ்வளவு.. இன்றைய நிலவரம் இதுதான்!

முதல்முறை இபிஎஃப் உறுப்பினராக இருக்க வேண்டும்

இந்த திட்டத்தில் பயன்பெற முதல்முறை இபிஎஃப் (EPF – Employee Provident Fund) உறுப்பினராக இருக்க வேண்டும். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், அந்த நபர் ஆகஸ்ட் 01, 2025-க்கு முன்னதாக பிஎஃப் பங்களிப்பு செய்யாதவராக இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் பயன்பெற புதியதாக வேலைக்கு சேரும் அந்த நபரின் மாத ஊதியம் ரூ.1 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us