AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Gold Price : ஒரே நாளில் ரூ.1,400 சரிவை சந்தித்த தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன?

Gold and Silver Price In Chennai Today | சென்னையில் நாளுக்கு நாள் தங்கம் விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று தங்கம் விலை ரூ.1,400 சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : ஒரே நாளில் ரூ.1,400 சரிவை சந்தித்த தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 23 Oct 2026 11:32 AM IST

சென்னை, அக்டோபர் 23 : சென்னையில் நாளுக்கு நாள் தங்கம் விலை (Gold Price) மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று (அக்டோபர் 23, 2026) 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.175 சரிவை சந்தித்துள்ளது. வெள்ளி விலையோ (Silver Price) மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொடர் சரிவை சந்தித்து வரும் தங்கம் விலை

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலை உச்சத்தில் இருந்தது. அதாவது ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.16,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு தங்கம் படிப்படியாக சரிவை சந்தித்தது. இந்த நிலையில் தான், ஆண்டின் இறுதியில் தங்கம் மீண்டும் விலை உயர்வை சந்திக்கும் என்றும், ஒரு கிராம் தங்கம் ரூ.20,000-த்தை தாண்டும் என்றும் கூறப்பட்டது. ஆனால், 2026 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், தங்கம் தொடர் சரிவை சந்தித்து வருகிறது.

இதையும் படிங்க : Gold Price: இரண்டாவது நாளாக குறைந்த தங்கம் விலை.. ஒரு சவரனுக்கு ரூ. 1,240 சரிவு

தங்கத்தின் மீதான தேவை அதிகரிப்பு, இருப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்வை சந்திக்கும். உலக அளவில் உள்ள மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் பத்திரங்களில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாக தங்கம் விலை சரிவை சந்தித்து வருகிறது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.13,000-க்கு கீழ் செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.175 குறைந்து ஒரு கிராம் ரூ.13,060-க்கும், சவரனுக்கு ரூ.1,400 சரிந்து ஒரு சவரன் ரூ.1,04,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14,247-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,976-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.225-க்கும், ஒரு கிலோ ரூ.2,25,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us