ஜெயிலர் பட ஷூட்டிங்கில் வர்மன் & கேங்ஸ் டான்ஸை பார்த்து ரசிக்கும் ரஜினிகாந்த் – வைரலாகும் வீடியோ
Superstar Rajinikanth enjoying Varman and gang dance | தமிழ் சினிமாவில் கடந்த 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ஜெயிலர். இந்தப் படத்தில் வர்மன் கேங் டான்ஸ் ஆடும் பிடிஎஸ் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் நெல்சன் திலீப் குமார். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியாகும் பெரும்பான்மையான படங்கள் டார்க் காமெடி பாணியில் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே நெல்சன் திலீப் குமாருக்கு தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் ஜெயிலர். இந்தப் படத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து இருந்தார்.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் முதல் பாகத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த பழைய பிடிஎஸ் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வீடியோவை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.




வர்மன் & கேங்ஸ் டான்ஸை பார்த்து ரசிக்கும் ரஜினிகாந்த்:
ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு வில்லனாக நடிகர் விநாயகன் நடித்து இருந்தார். அவரின் கதாப்பாத்திரத்திற்கு வர்மன் என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது. இந்த கதாப்பாத்திரம் அவரது அடியாட்கள் உடன் மிகவும் ஜாலியாக இருக்கும் போது டான்ஸ் ஆடி மகிழ்ச்சியாக இருப்பது போல காட்டப்பட்டு இருக்கும். அந்த டான்ஸ் ரிகர்சல் வீடியோவில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியாக இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… சுந்தர் சி – குஷ்பூ தம்பதியின் மூத்த மகள் திருமணம்… ஒன்று கூடிய பிரபலங்கள்
இணையத்தில் வைரலாகும் ஜெயிலர் படத்தின் பிடிஎஸ் வீடியோ:
#Jailer BTS – 😍Look at #SuperstarRajinikanth smile enjoying Varman & Gang Dance rehearsal. pic.twitter.com/KHQfAacCGo
— Studio Flicks (@StudioFlicks) June 26, 2026
Also Read… அந்த நடிகை மாதிரி என்னால் ஒருநாளும் செய்ய முடியாது – நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி