AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்தியா வெற்றிபெற 183 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அயர்லாந்து!

இந்திய அணி அயர்லாந்துக்கு எதிராக ஜூன் 26, 2026 இன்று நடைபெறும் முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி 183 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

இந்தியா வெற்றிபெற 183 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அயர்லாந்து!
Ind Vs Ire
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 26 Jun 2026 21:10 PM IST

இந்திய அணி அயர்லாந்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜூன் 26, 2026 இன்று நடைபெறும் முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி 183 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

இந்தியா வெற்றிபெற 183 ரன்கள் இலக்கு

பெல்ஃபாஸ்டில் உள்ள சிவில் சர்வீஸ் கிரிக்கெட் கிளப்பில் ஜூன் 26, 2026 இன்று வெள்ளிக்கிழமை அன்று இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. ஆரம்பத்தில் 51 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் அந்த அணியின் கேப்டன் லோர்கன் டக்கர் அரைசதம் அடித்து சரிவிலிருந்து மீட்டார். மேலும், கேரத் டெலானியும் 49 ரன்கள் குவித்தார்.

இதையும் படிக்க : IND vs IRE: அயர்லாந்தை எதிர்கொள்ளும் ஷ்ரேயாஸ் படை.. முதல் டி20யில் சவால் யாருக்கு?

வைபவ் சூர்யவன்ஷி இந்த போட்டியில் களமிறங்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இருப்பினும் முதல் பந்திலிருந்தே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தை பேக் டு தி லெந்த் வகையில் பந்துவீசினர்.

ஹர்ஷித் ரானா 2வது ஓவரில் ராஸ் அடேரை ஆட்டமிழக்கச் செய்தார், அதைத் தொடர்ந்துர்ஷ்தீப் சிங் ஹாரி டெக்டரை ரன் ஏதுமின்றி வெளியேற்றினார். பவர் பிளே முடிவில் அயர்லாந்து 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்திருந்தது. மேலும் ஷிவம் துபேவும் 8வது ஓவரில் பெஞ்சமின் கலிட்ஸை ஆட்டமிழக்கச் செய்தார். அயர்லாந்து 51 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், டக்கர் ஜார்ஜ் டாக்ரெல்லுடன் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்தார்.

இதையும் படிக்க : IND vs IRE: உள்ளே வரும் வைபவ் சூர்யவன்ஷி.. இந்திய பிளேயிங் லெவனில் வெளியேறப்போவது யார்?

டக்கர் நிதானமாக தொடங்கினாலும், விரைவில் அதிரடிக்கு மாறினார். அவர் 13வது ஓவரில் அக்ஷர் படேலின் பந்துவீச்சில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாசி, 35 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்தார். இருப்பினும் 15வது ஓவரில் ஹர்ஷித் அவரை ஆட்டமிழக்கச் செய்தார். மற்றொரு பக்கம் டெலானி ஜார்ஜ், டாக்ரெல்லுடன் இணைந்து 49 ரன்கள் சேர்த்ததார். இதன் மூலம் அயர்லாந்து 150 ரன்கள் என்ற மைல்கல்லைக் கடக்க உதவியது.

மேலும், 17வது ஓவரில் பிரசித் வீசிய பந்துவீச்சில் டெலானி 27 ரன்கள் அடித்தார். இதன் மூலம் அவரது அணியை 180 ரன்கள் அடைய காரணமாக அமைந்தார். ஆனால் அடுத்த ஓவரிலேயே அர்ஷ்தீப் அவரை 49 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார்.1 ரன்னில் அவரது அரைசதம் மிஸ்ஸானது. இந்திய தரப்பில் ஹர்ஷித் 3 விக்கெட்டுகளையும், அக்ஷர் படேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனையடுத்து இந்திய அணி வெற்றிபெற 183 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

Follow Us