AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs IRE: உள்ளே வரும் வைபவ் சூர்யவன்ஷி.. இந்திய பிளேயிங் லெவனில் வெளியேறப்போவது யார்?

IRE vs IND 1st T20 Playing 11: கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 4வது இடத்திலும், துணை கேப்டன் திலக் வர்மா 5வது இடத்திலும் பேட்டிங் செய்வார்கள். இந்த நிலையில், டாப் ஆர்டரில் மாற்றம் செய்யப்பட்டால், திலக் வர்மா 6வது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்படிப்பட்ட சூழ்நிலையில், சிவம் துபே ஆடும் லெவனில் இருந்து நீக்கப்படலாம்.

IND vs IRE: உள்ளே வரும் வைபவ் சூர்யவன்ஷி.. இந்திய பிளேயிங் லெவனில் வெளியேறப்போவது யார்?
வைபவ் சூர்யவன்ஷி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 25 Jun 2026 18:33 PM IST

இந்திய கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் உள்ளது. அயர்லாந்தில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு (IND vs IRE) இடையேயான முதல் டி20 போட்டி நாளை அதாவது 2026 ஜூன் 26ம் தேதி நடைபெறுகிறது. இப்போட்டி இந்திய நேரப்படி மாலை 6:00 மணிக்குத் தொடங்கும். ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இந்திய அணி (Indian Cricket Team) முதல் முறையாக விளையாட உள்ளது. இருப்பினும், இந்தப் போட்டிக்கு முன்னதாக ஒரு வீரரை நீக்கி வைபவ் சூர்யவன்ஷியை ஆடும் லெவனில் சேர்ப்பதுதான் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் அணி நிர்வாகத்திற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.

ALSO READ: முதல் 7 இடங்களில் 4 இடங்கள்.. ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம்!

வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாவாரா?

15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் 2026 தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய டி20 அணியில் இடம்பிடித்துள்ளார். சமீபத்தில் இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிரான முத்தரப்பு தொடரின் இறுதி ஆட்டத்தில் 29 பந்துகளில் 94 ரன்கள் என்ற அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி, தனது சர்வதேச அறிமுகம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார். வைபவ் சூர்யவன்ஷி இந்தப் போட்டியில் அறிமுகமாக வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஆனால் இந்த பணி இந்திய அணி நிர்வாகத்திற்கு எளிதானதாக இருக்காது.

இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்..?

இந்தியாவின் முதல் 3 பேட்ஸ்மேன்கள் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆவர். இந்த மூவரின் டி20 சாதனைகளை இந்திய அணியால் புறக்கணிக்க முடியாது. இந்திய அணி நிர்வாகம் வைபவ் சூர்யவன்ஷியை தொடக்க ஆட்டக்காரராகச் சேர்த்தால், சாம்சன் அல்லது அபிஷேக் இருவரில் ஒருவர் கீழ் வரிசையில் விளையாட வேண்டும் அல்லது அணியிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 4வது இடத்திலும், துணை கேப்டன் திலக் வர்மா 5வது இடத்திலும் பேட்டிங் செய்வார்கள். இந்த நிலையில், டாப் ஆர்டரில் மாற்றம் செய்யப்பட்டால், திலக் வர்மா 6வது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்படிப்பட்ட சூழ்நிலையில், சிவம் துபே ஆடும் லெவனில் இருந்து நீக்கப்படலாம். அப்படி இல்லையென்றால். சூர்யவன்ஷி தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கினால், சாம்சன் 6வது இடத்தில் விளையாடலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில், சிவம் துபே 7வது இடத்திலும், வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் படேல் ஆகியோரில் ஒருவர் 8வது இடத்திலும் பேட்டிங் செய்யலாம். இருப்பினும், அப்படிப்பட்ட சூழ்நிலையில், பார்ட் டைம் பந்துவீச்சாளர் சிவம் துபே முழுமையாக 4 ஓவர்களும் பந்துவீச வேண்டியிருக்கும்.

எனவே, தலைமைப் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் மற்றும் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர், வைபவ் சூர்யவன்ஷிக்கு அறிமுக வாய்ப்பு அளிக்க வேண்டுமா அல்லது தற்போதைக்கு டி20 உலகக் கோப்பையை சாம்பியன் ஆக்கிய வீரர்களுக்கு மட்டும் வாய்ப்பு அளிக்க வேண்டுமா என்பதை தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும்.

ALSO READ: இந்தியா – அயர்லாந்து போட்டி தொடங்க ஒரே நாள்தான்.. அதிரடியாக மாற்றப்பட்ட போட்டி நேரம்.. காரணம் என்ன?

இரு அணிகளும் பின்வருமாறு

இந்திய அணி:

ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (துணை கேப்டன்), ரவி பிஷ்னோய், அபிஷேக் சர்மா, சூர்யன்ஷ் ஷெட்ஜ், பிரசித் கிருஷ்ணா, சஞ்சு சாம்சன், அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், சிவம் துபே, பிரின்ஸ் யாதவ், வஹவ் துபே

அயர்லாந்து அணி:

லோர்கன் டக்கர் (கேப்டன்), ராஸ் அடேர், பென் காலிட்ஸ், காரெத் டெலானி, ஜார்ஜ் டாக்ரெல், ஸ்டீபன் டோஹெனி, மேத்யூ ஹம்ப்ரீஸ், கேவின் ஹோய், மேத்யூ ஹோலார்ட், லியாம் மெக்கார்த்தி, ஜே மூண்ட்ரா, ஹாரி டெக்டர், டிம் டெக்டர், ரூபன் வில்சன்

Follow Us