AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

India vs Bangladesh Highlights: வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

India vs Bangladesh Women’s T20 World Cup 2026 Highlights: மகளிர் டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறும் தங்களது நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்ள, இந்தியா வங்காளதேசத்திற்கு எதிராக கட்டாயம் வெற்றி பெற வேண்டும். ஆஸ்திரேலியாவுடனான போட்டியும் மிக முக்கியமானது. தென்னாப்பிரிக்காவுடனான போட்டியைப் பொறுத்தவரை, நிகர ரன் விகிதம் மற்றும் புள்ளிகளின் சமன்பாடுகளே இனி இந்திய அணியின் தலைவிதியைத் தீர்மானிக்கும்.

C Murugadoss
C Murugadoss | Updated On: 25 Jun 2026 22:27 PM IST
Share
India vs Bangladesh Highlights: வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
இந்திய மகளிர் அணி

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் இந்திய அணியின் பயணம் விறுவிறுப்பாகியுள்ளது. இத்தொடரில் அரையிறுதிக்கான தங்களது வாய்ப்புகளைத் தக்கவைத்துக் கொள்ள, வியாழக்கிழமை மான்செஸ்டரில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டும். இந்தியா அரையிறுதிக்குச் செல்வதற்கான எளிதான மற்றும் பாதுகாப்பான வழி, லீக் சுற்றில் மீதமுள்ள இரண்டு அணிகளான வங்கதேசம் (ஜூன் 25) மற்றும் ஆஸ்திரேலியா (ஜூன் 28) ஆகியவற்றை வெல்வதே ஆகும். இது நடந்தால், இந்தியா அதிகபட்சமாக 8 புள்ளிகளுடன் நேரடியாக அரையிறுதிக்குச் செல்லும். தென்னாப்பிரிக்காவும் தங்களது மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் (நெதர்லாந்து மற்றும் வங்கதேசத்திற்கு எதிராக) வெற்றி பெற்று 8 புள்ளிகளைப் பெற்றால், கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில், இந்தியாவின் நிகர ரன் விகிதம் (+2.511) தற்போது தென்னாப்பிரிக்காவின் (-0.546) விகிதத்தை விட மிகவும் சிறப்பாக இருப்பதால், இந்தியா எளிதாக முன்னிலை பெறும்.

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 25 Jun 2026 10:15 PM (IST)

    5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

    இந்திய மகளிர் அணி ஷபாலி வர்மாவின் அதிரடி அரைசதத்தின் உதவியால் 16.5 ஓவர்களில் இலக்கை தொட்டு வெற்றி பெற்றது.

  • 25 Jun 2026 09:45 PM (IST)

    IND W vs BAN W Live Score: 3வது விக்கெட்டை இழந்த இந்திய மகளிர்..!

    இந்திய மகளிர் 11.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்தது. ஸ்மிருதி மந்தனா 8 ரன்களுக்கும், ஷஃபாலி 53 ரன்களுக்கும், யாஸ்திகா 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

  • 25 Jun 2026 09:31 PM (IST)

    IND W vs BAN W Live Score: இந்தியா 28 பந்துகளில் 50 ரன்கள் குவிப்பு..!

    137 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய இந்திய மகளிர் அணி, விறுவிறுப்பாக பேட்டிங் செய்து 4.4 ஓவர்களில் வெறும் 28 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தது.

  • 25 Jun 2026 09:06 PM (IST)

    IND W vs BAN W Live Score: 8 ரன்களில் விக்கெட்டை இழந்த ஸ்மிருதி மந்தனா..!

    வங்கதேச மகளிர் அணிக்கு எதிராக 137 ரன்கள் என்ற இலக்கை துரத்தும்போது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா வெறும் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

  • 25 Jun 2026 08:32 PM (IST)

    IND W vs BAN W Live Score: 20 ஓவர் முடிவில் 136 ரன்கள் எடுத்த வங்கதேசம்.. இந்திய அணிக்கு 137 ரன்கள் இலக்கு!

    2026 மகளிர் டி20 உலகக் கோப்பையில் இன்று அதாவது வங்கதேச மகளிர் அணியும், இந்திய மகளிர் அணியும் மோதி வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த வங்கதேச மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 136 ரன்கள் எடுத்தது.

  • 25 Jun 2026 08:06 PM (IST)

    IND W vs BAN W Live Score: 14 ஓவர்களுக்கு வங்கதேசம் 96 ரன்கள்..!

    14 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்துள்ளது. இந்த முக்கியமான போட்டியில் இந்திய வீரர்கள் தங்களது மோசமான களத்தடுப்பால் திணறி வருகின்றனர். நான்காவது மற்றும் ஐந்தாவது ஓவர்களுக்கு இடையில் வெறும் நான்கு பந்துகளில் மூன்று கேட்சுகள் தவறவிடப்பட்டது.

  • 25 Jun 2026 07:47 PM (IST)

    IND W vs BAN W Live Score: 2வது விக்கெட்டை இழந்த வங்கதேசம்.. ஆட்டத்தை கையில் எடுக்கும் இந்தியா!

    நந்தினி சர்மா வீசிய 9வது ஓவரில் சிறப்பாக விளையாடி கொண்டிருந்த பெர்டோஸ் 33 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தற்போது, வங்கதேச அணிக்கு 2வது விக்கெட் வீழ்ந்தது.

  • 25 Jun 2026 07:37 PM (IST)

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வங்கதேசம்

    டிரிங்க்ஸ் இடைவேளையின்போது வங்கதேசம் நல்ல நிலையில் இருந்தது. இடைவேளையின்போது வங்கதேச அணி 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் எடுத்திருந்தது. ஃபீல்டர்கள் கேட்ச் வாய்ப்புகளை நழுவவிட்டது ஒரு பின்னடைவாக அமைந்தது.

  • 25 Jun 2026 07:36 PM (IST)

    IND W vs BAN W Live Score: 6 ஓவர்களுக்கு வங்கதேசம் 40 ரன்கள்..!

    இந்தியாவிற்கு எதிரான மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் வங்கதேச மகளிர் அணி 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் எடுத்துள்ளது.

  • 25 Jun 2026 06:52 PM (IST)

    பங்களாதேஷ் பெண்கள் அணியின் பிளேயிங் லெவல்

    பங்களாதேஷ் பெண்கள் அணியின் பிளேயிங் லெவலில் ஜுயாரியா ஃபெர்டஸ், திலாரா அக்டர், ஷர்மின் அக்தர், நிகர் சுல்தானா (சி/டபிள்யூ.கே), சோபானா மோஸ்டரி, ஷோர்னா அக்டர், ரிது மோனி, நஹிதா அக்டர், ரபேயா கான், மருஃபா அக்டர் மற்றும் சஞ்சிதா அக்தர் மேக்லா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

  • 25 Jun 2026 06:48 PM (IST)

    இந்திய அணியின் பிளேயிங் லெவன்

    இன்றைய போட்டியில் களமிறங்கும் இந்திய வீராங்கனைகள் –  ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர், ரிச்சா கோஷ் , தீப்தி ஷர்மா, ராதா யாதவ் , ஸ்ரீ சரணி, நந்தினி சர்மா மற்றும் ரேணுகா சிங் தாக்கூர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

  • 25 Jun 2026 06:38 PM (IST)

    டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த வங்கதேசம்

    இந்திய மகளிருக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இந்தியாவுக்கு எதிராக பெரிய ஸ்கோரை அடிக்கும் முனைப்பில் வங்க தேசம் அணி களமிறங்கியுள்ளது.

  • 25 Jun 2026 06:34 PM (IST)

    சாதனை படைக்க காத்திருக்கும் ஹர்மன்பிரீத் மற்றும் தீப்தி 

    வங்கதேசத்திற்கு எதிராக 500 டி20 ரன்களைக் குவித்த முதல் இந்திய பேட்ஸ்மேனாகத் திகழ ஹர்மன்பிரீத் கவுருக்கு இன்னும் 17 ரன்கள் மட்டுமே தேவைப்படுகின்றன. அதேபோல், மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனையாக மாற தீப்தி சர்மாவுக்கு இன்னும் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே தேவைப்படுகிறது.

  • 25 Jun 2026 06:28 PM (IST)

    எங்களால் முடிந்த சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம் – ஷஃபாலி வர்மா

    வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டம் மிகவும் முக்கியமானது என்பது இந்தியத் தொடக்க ஆட்டக்காரர் ஷஃபாலி வர்மாவுக்குத் தெரியும். ஒரு அணியாகச் செயல்படும்போது மோசமான நாள் ஒன்று அமையும்போதெல்லாம், ஒட்டுமொத்த அணியின் மன உறுதியும் குறையும் என்பது எங்களுக்குத் தெரியும். அதேவேளையில், நாங்கள் ஒருவருக்கொருவர் ஊக்கமளித்துக்கொள்ள வேண்டும் என்பதையும் நாங்கள் அறிவோம். இந்த ஆட்டம் குறித்து அணிக்குள் கலந்துரையாடினோம். இது ஒரு முக்கியமான ஆட்டம் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்போம்; எங்களால் முடிந்த சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம் என்று அந்த வீராங்கனை கூறினார்.

Published On - Jun 25,2026 6:00 PM

Follow Us